ஏழை எளியோரின் உயிர்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தி.மு.க. அரசின் சட்டம் ஒழுங்கு நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியரான அஜித்குமார், காவல்துறை விசாரணை என்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டு, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது ஒரு லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த வாரம், பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை ஒரு காவலர் தாக்கிய சம்பவத்தை நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.
தற்போது, உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர், தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்துச் செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக வாக்குமூலம் அளித்திருப்பது, காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது,” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்குத் தக்க நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…