பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா தடை
இந்திய அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு சில நடவடிக்கையை எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது இந்திய அரசாங்கம்.
இதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து எந்த ஒரு பொருளும் இந்தியாவிற்குள் வர முடியாது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய கொடி ஏந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லவும் அனுமதி இல்லை என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மருந்துப் பொருட்கள்,பழங்கள்,எண்ணெய் விதைகள்
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இவைகளின் இறக்குமதி மிகக் குறைவாக – 0.1% கீழாகவே இருந்தது.
இந்த தடை இரு நாடுகளின் வர்த்தக உறவுகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…