tamilnadu

உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை தாவரவியல் பூங்காவின் 127-வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார்.

கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விழாவின் முக்கிய அங்கமாக இந்த மலர் கண்காட்சி திகழ்கிறது.

மலர் கண்காட்சி இன்று முதல் (மே 15- 25ம்) தேதி வரை, மொத்தம் 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

மலர் கண்காட்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட 275 வகையான விதைகள் மற்றும் நாற்றுகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற பல புதிய ரகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளனர்.

பூங்காவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

45 ஆயிரம் மலர் தொட்டிகளில் விதவிதமான மலர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக, சோழர்களின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் பிரம்மாண்டமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு ராஜராஜ சோழனின் அரண்மனை போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சோழ அரசின் பெருமையை பறைசாற்றும் விதமாக, கரிகாலன் கட்டிய கல்லணையின் வடிவம் 65 ஆயிரம் பூக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 லட்சம் மலர்களைப் பயன்படுத்தி செஸ் போர்டு, யானை போன்ற கவர்ச்சியான அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.

தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை மற்றும் கள்ளிச்செடி மாளிகை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த புதுப்பிக்கப்பட்ட பகுதிகளில் அரிய வகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரியத்தை மலர்களின் மூலம் அழகாக வடிவமைத்து மக்கள் மத்தியில் உணர்வூட்டும் இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் பெருமையை உலகுக்கு காட்டும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago