மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!
மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்து விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்கள் ‘மா’ மற்றும் ‘தென்னை’ ஆகும். சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மா உற்பத்திக்கு மிகவும் பெயர் பெற்றது, சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியில், 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் மாம்பழக் கூழ் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களைக் கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதால், கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மாங்கூழ் தொழிற்சாலைகள் ஒரு கிலோ மாம்பழத்திற்கு வெறும் 4 முதல் 5 ரூபாய் மட்டுமே தர முன்வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்ட வேண்டுமென்று தி.மு.க. அரசுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மனு அளித்தும், இதுவரை எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்:
மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தப்படுவதாகவும், இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ‘மா’ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், 2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, எம்.எல்.ஏ., தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பாலகிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் கே. அசோக்குமார், எம்.எல்.ஏ., ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.எம். தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், கட்சி உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தி.மு.க. அரசைக் கண்டித்து நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், ‘மா விவசாயிகள்’, வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…