tamilnadu

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க.வுக்குத் தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ஆதிதிராவிடர் பள்ளிகளின் அவலநிலை, கூட்டணி மாற்றங்கள், மற்றும் தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் அவர் பேசினார்.

பாமக நிறுவனர் ராமதாஸை செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “முதலமைச்சர் சொல்லிதான் போய் பார்த்தாரா அல்லது தனிப்பட்ட முறையில் பார்த்தாரா என்று யூகம் அடிப்படையில் சொல்ல முடியாது.

ஒரு அரசியல் கட்சித் தலைவர், அரசியல் இல்லாமல் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பிற்காலத்தில் இது அரசியல் ஆக வரலாம், வராமலும் இருக்கலாம்,” என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதா என்ற கேள்விக்கு, பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் மற்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் மாநில நிர்வாகிகள் தொடர்பான பட்டியல் மேலிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அது வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago