Connect with us

tamilnadu

Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024

Published

on

Staff Selection Commission (SSC) தேர்வு வாரியம் – MTS 8326 பணியிடங்கள் 2024

பணியிடங்கள்: 8326 (மொத்தம்)

  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • வயது வரம்பு: 18 – 25 (திருத்தப்பட்ட வயது வரம்பு அரசாங்க அறிவிப்பின்படி இருக்கும்)
  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்

தேர்வு முறை: கணினி வழி தேர்வு (Computer Based Test)

தேர்வின் பாடத்திட்டம் (Syllabus):

  • பொதுத் தமிழ்
  • பொது அறிவு
  • கணிதம்
  • ஆங்கிலம் (அடிப்படை)

தேர்வுக்கு தயாராவது எப்படி?

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து (Notification) தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தை (Syllabus) பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • NCERT புத்தகங்கள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் குறித்த தகவல்களைப் படிக்கவும்.
  • மாதிரி தேர்வுகளை (Mock Tests) எழுதிப் பாருங்கள்.
  • கடந்த ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் கிடைக்குமானால், அவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:   31 ஜூலை 2024 (வியாழக்கிழமை)

india

புதிய வரி விதிப்பு கொள்கை

Published

on

By

புதிய வரி விதிப்பு கொள்கை

  • மத்திய நிதி பட்ஜெட் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
  • அதில் பழைய வருமான விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
  • மாறாக புதிய வருமான வரித்திட்ட நடைமுறையில் மாற்றங்கள் பல கொண்டுவந்துள்ளார்.
  • புதிய வரி விதிப்பு மாற்றங்கள்
  • ரூ. 3 லட்சம் வரை எந்த மாற்றமும் இல்லை.
  • ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வரிவிதிப்பு.
  • ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் 10% வரிவிதிப்பு.
  • ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் 15% வரிவிதிப்பு.
  • ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் 20% வரிவிதிப்பு.
  • ரூ.15 லட்சத்திற்கு மேல் 30% வரிவிதிப்பு.
Continue Reading

tamilnadu

மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள்

Published

on

By

மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள்

  • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரையில் கேஸ் பேருந்து இயக்கம் மதுரையில் அரசு போக்குவரத்துக் கழகம் நேற்று கேஸ் மூலம் இயங்கும் பேருந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் தமிழ்நாடு அரசு போக்கும் வரத்துகழகம் இணைத்து சிஎன்ஜி கேஸ் மூலம் இயக்கப்படும் பேருத்தின் இயக்கம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கியது
  • காற்று மாசுபாடு,எரிபொருள் செலவு குறையும் என்ற பல காரணக்களுக்காக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இவ்வகை பேரூந்துகளில் இயற்கை எரிவாயு பஸ்கள், CNG (Compressed Natural Gas) பயன்படுத்துகின்றன.
  • மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன இவ்வகை பேருந்துகள்.
Continue Reading

tamilnadu

நாகர்கோவில் நெத்திலி மீன் அவியல்

Published

on

By

நாகர்கோவில் நெத்திலி மீன் அவியல்

நெத்திலி மீன் அவியல், தமிழ்நாட்டின் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் பிரபலமான ஒரு மிகசுவையான மீன் உணவாகும். இது நெத்திலி மீன், தேங்காய், கறிவேப்பிலை, மசாலா பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது தனி சிறப்பு.

இதன் சுவை மனதை மயக்கும்.

 

நெத்திலி மீன் அவியல் தேவையான பொருட்கள்

  • நெத்திலி மீன் – 250 கிராம்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • சின்ன வெங்காயம் – 5
  • பூண்டு – 2 பல்
  • பச்சை மிளகாய் – 3
  • கிளி மூக்கு மாங்காய் – தேவைக்கு
  • புளி – சிறிய எலுமிச்சை அளவு
  • தண்ணீர் – 1/4 கப்
  • கறிவேப்பிலை – சிறிது
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் தூள் – 3/4 தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

    செய்முறை

  • நெத்திலி மீனை சுத்தம் செய்து, உப்பு சேர்த்து தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புளி, தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
  • ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி, கடுகு தாளிக்கவும்.
  • கடுகு தாளித்ததும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அரைத்த மசாலா கலவையை சேர்த்து, நன்கு வதக்கவும்.
  • மசாலா வாசனை வரும் வரை வதக்கிய பின், ஊற வைத்திருக்கும் நெத்திலி மீனை சேர்க்கவும்.
  • உப்பு சேர்த்து, நன்கு கிளறி விடவும்.
  • தேவையான அளவு தண்ணீர் , வெட்டிய மாங்காய் சேர்த்து மூடி வைத்து 5 முதல் 6 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • மீன் வெந்து, மசாலா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
  • தேவையென்றால், மேலும் உப்பு சேர்த்து சரிசெய்யவும்.
  • நெத்திலி மீன் அவியல் தயார்!

சூடான சாதத்துடன் நெத்திலி மீன் அவியலை பரிமாறவும்.ரசம் சேர்த்து சாப்பிடலாம்.
நெத்திலி மீன் அவியல் செய்து சுவைத்து பாருங்கள்.

Continue Reading

Trending