Connect with us

india

இரண்டாக பிரிகிறது தமிழ்நாடு மின்சாரவாரியம்

Published

on

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) இரண்டாக பிரிக்க ஒப்புதல்!

2024 ஜூலை 12 அன்று, மத்திய அரசு டான்ஜெட்கோவை இரண்டு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க ஒப்புதல் அளித்தது.

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் (TNPGCL)

  •  இது நிலக்கரி, டீசல், அணு மற்றும் பிற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்.

தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL)

  • இது சூரிய சக்தி, காற்று சக்தி, நீர் மின்சாரம் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்.

பிரிவின் நோக்கங்கள்

  • மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் செயல்திறனை மேம்படுத்துதல்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களை ஊக்குவித்தல்.
  • மின் கட்டணத்தை குறைத்தல்.

சவால்கள்

  • புதிய நிறுவனங்களை அமைப்பதில் சில சவால்கள் இருக்கலாம்.
  • பணியாளர்களை பிரிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
  • கடன் சுமையை பிரிப்பதில் சவால்கள் இருக்கலாம்.

டான்ஜெட்கோவை இரண்டாக பிரிப்பது ஒரு முக்கியமான முடிவு. இது தமிழ்நாட்டின் மின் துறையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.

Employment

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

Published

on

By

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.

Continue Reading

Employment

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

Published

on

By

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு போலிசார் அனுமதி அளித்துள்ளனர்.

13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை மறுநாள் பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.

தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.

நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading

india

நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!

Published

on

By

நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!

நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது.

தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.

வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி விவசாயிகள் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் திமுக ஆட்சி தான்.

ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லை, நடைபாதைகள் இல்லை, மின் கட்டணம் போன்ற பிரச்னைகள் ஏராளமாக உள்ளது.

சொல்லாததை சீமான் எதுவும் சொல்லவில்லை, இந்த மண்ணுக்கு தேவையான விஷயங்களை தான் சீமான் பேசி வருகிறார். எனவே சீமான் பேசியது சரி தான்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending