Employment
எஸ்எஸ்சி சிஜிஎல் SSC CGL வேலைவாய்ப்பு 17727 காலி பணியிடங்கள்
எஸ்எஸ்சி சிஜிஎல் SSC CGL வேலைவாய்ப்பு 17727 காலி பணியிடங்கள்
Staff Selection Commission (SSC) நடத்தும் Combined Graduate Level (CGL) தேர்வு மூலம் central government வேலைவாய்ப்புகள் கிடைக்கும். CGL தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அதிகாரி, உதவி ஆய்வாளர், உதவி கணக்காயர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது.
எஸ்எஸ்சி சிஜிஎல் காலி பணியிடங்கள்
- SSC CGL தேர்வு மூலம் பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
- 2024 ஆம் ஆண்டிற்கான ssc சிஜிஎல் தேர்வில் மொத்தம் 17,727 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- எந்தவொரு பட்டதாரி பட்டமும் (graduation degree) பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 18-32 வயது (பதிவிக்கப்பட்ட பிரிவை பொறுத்து மாறுபடலாம்)
காலி பணியிட பதவிகள்
- உதவி பிரிவு அதிகாரி
- உதவி அமலாக்க அதிகாரி
- துணை ஆய்வாளர்
- ஆய்வாளர்
- நிர்வாக அதிகாரி
- ஆராய்ச்சி உதவியாளர்
- பிரிவு கணக்காயர்
- ஜூனியர் புலனாய்வு அதிகாரி
- ஜூனியர் புள்ளியியல் அதிகாரி
- கணக்காய்வாளர்
- கணக்கதாரர்
- தபால் உதவியாளர்
- செயலக உதவியாளர்
- வரி உதவியாளர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24 ஜூலை 2024
தேர்வு தேதி (Tier-1): செப்டம்பர்/அக்டோபர் 2024
தேர்வு முறை (Tier-1 & Tier-2): கணினி வழி தேர்வு (Computer Based Examination)
விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி: ஜூன் 24, 2024
விண்ணப்ப திருத்தம் செய்வதற்கான தேதி: ஆகஸ்ட் 10 & 11, 2024
Employment
டிசம்பர் மாதத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள்!
டிசம்பர் மாதத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள்!
TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2 A பணியிடங்கள் என்று 2,327 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 20ம் தேதி வெளியிட்டது.
உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல காலி இடங்களுக்கு தேர்வுகள் அறிவித்தது.
14ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு நடைபெற்றது.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7,93, 966 பேர் எழுதினர்.
தேர்வுக்கான முடிவுகள் உத்தேசமாக வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Employment
செப்டம்பர் 14-ல் TNPSC Group 2 & 2A தேர்வு
செப்டம்பர் 14-ல் TNPSC Group 2 & 2A தேர்வு
TNPSC Group 2 & 2A தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் 14-ல் நடைபெறும் என TNPSC தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் TNPSC சார்பாக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
அதில் TNPSC Group 2 & 2A தேர்வுகள் செப்டம்பர் 28 என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தேர்வர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதற்கு விளக்கம் தரும் வகையில் TNPSC Group 2 & 2A தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் 14-ல் நடைபெறும் என TNPSC தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
Employment
குரூப் 4 தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியானது
குரூப் 4 தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியானது
அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழக அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.
கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி 6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
ஆனால் தற்போது தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்கு 8 மாதத்திற்கு மேல் கால தாமதங்களாகிவிட்டன.
மகளிருக்கான இடஒதுக்கீடு முறையில் மாற்றத்தை குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகின.
இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவிற்காக 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்தனர்.
இந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி அதாவது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Employment4 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized4 months ago
Hello world!
-
cinema4 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu4 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema4 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
india4 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india4 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
Employment3 months ago
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள்