Connect with us

sports

பாரிஸ் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்

Published

on

பாரிஸ் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்

  • 2024ம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 26 ஜூலை 2024 இன்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.
  • இது பாரிஸில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் முதல் முறையாக 1900-ம் ஆண்டு பாரிஸில் ஒலிம்பிக் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  • சீன் நதியில் நடத்தப்பட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது.பல்வேறு நாடுகளின் வீரர்கள் படகுகளில் அணிவகுத்து வந்தது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
  • இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் 117 வீரர்களுடன் களமிறங்கியது.
  • இன்று ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

india

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்!

Published

on

By

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்!

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்!

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வயது 92 உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலாமானார்.

கர்நாடகாவின் ,மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா.

காங்கிரஸ் முகமாக கர்நாடக அரசியலில் பல ஆண்டுகாலம் இருந்தவர்.

கர்நாடகா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

முதலமைச்சராக 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை இருந்தார்.

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார்.

தீவிர அரசியலில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியது.

சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலன் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா அதிகாலை 3 மணிக்கு பெங்களூரில் காலமானார்.

மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

india

உலக செஸ் சாம்பியன்ஷிப் – 3வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி!

Published

on

By

உலக செஸ் சாம்பியன்ஷிப் – 3வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார்.

இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் முதலில் யார் 7.5 புள்ளிகளை எடுக்கிறார்களோ அவரே உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.

முதலாவது சுற்றில் சீன வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார்.

2வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது.

3ஆவது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும், லிரென் கருப்பு நிறத்துடனும் விளையாடினார். போட்டியில் 37ஆவது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.

குகேஷ், டிங் லிரென் இருவரும் 1.5 1.5 புள்ளிகள் என சமநிலையில் உள்ளார்கள்.

18 வயதான குகேஷ் அந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சிறப்பையும் குகேஷ் பெறுவார்.

Continue Reading

india

2027வரை ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிடு!

Published

on

By

2027வரை ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிடு!

2025 முதல் 2027 வரை 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரையும், 2027ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதிகள் குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், போட்டியின் அட்டவணைகளை கடைசி நேரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் வெளியிடுவதை தவிர்க்கவே அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் நாளை மறுநாள் (நவ. 24) முதல் இரண்டு நாள்களுக்கு ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெறுகிறது.

மொத்தம் 574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள பெயர்களை அளித்துள்ளனர்.

பாகிஸ்தானை தவிர மற்ற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐபிஎலில் விளையாட தங்கள் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.

Continue Reading

Trending