india
ஆகஸ்ட் 15-ல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3
ஆகஸ்ட் 15-ல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3
புவிக் கண்காணிப்புக்காக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆக.15-ஆம் தேதி இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்துள்ளது.
சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கும் மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெறும்.
என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
Employment
திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!
திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.
பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.
Employment
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு போலிசார் அனுமதி அளித்துள்ளனர்.
13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாளை மறுநாள் பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.
தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.
நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
india
நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!
நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது.
தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி விவசாயிகள் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் திமுக ஆட்சி தான்.
ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லை, நடைபாதைகள் இல்லை, மின் கட்டணம் போன்ற பிரச்னைகள் ஏராளமாக உள்ளது.
சொல்லாததை சீமான் எதுவும் சொல்லவில்லை, இந்த மண்ணுக்கு தேவையான விஷயங்களை தான் சீமான் பேசி வருகிறார். எனவே சீமான் பேசியது சரி தான்” என்று தெரிவித்துள்ளார்.
-
Employment7 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized7 months ago
Hello world!
-
cinema6 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu6 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema7 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india2 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india7 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india6 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்