Connect with us

tamilnadu

நெல்லையில் பரவலாக மழை

Published

on

நெல்லையில் பரவலாக மழை

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறுஇடங்களில் இன்று காலை முதல் பலராவாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தென்தமிழகமான திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1 மணி நேரமாக மழை பெய்து வருகிறது.

நெல்லையை பொறுத்தவரை பாளையம்கோட்டை, வண்ணாரப்பேட்டை , குறிச்சி ,மேலப்பாளையம் ,தருவை ,கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலவலாக மலை பெய்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக குளிர்ச்சியான சூழ்நிலை உருவான நிலையில் இன்று வெப்பம் தணிந்து குறிச்சியான சூழல் நிலவுகிறது.

மிதமான மழையினால் மக்கள் மகிழ்ச்சில் உள்ளனர்.

india

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Published

on

By

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சட்ட திருத்தத்தின் சில பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது.

வக்ஃபு விவகாரத்தில் லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன.

எழுத்துப்பூர்வ பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்கிறேன். எனவே இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக்கூடாது.

வக்ஃபு என பதியப்பட்ட, வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

மத்திய தரப்பு விளக்கத்தை தரும் வரை ஒரு வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

Continue Reading

india

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

Published

on

By

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் - பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

மும்மொழி கல்வி தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.

இந்தி மொழியும் இனி சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.

மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Continue Reading

india

கோவையில் பாரா மெடிக்கல் மாணவி தற்கொலை – உறவினர்கள் போராட்டம்!

Published

on

By

கோவையில் பாரா மெடிக்கல் மாணவி தற்கொலை - உறவினர்கள் போராட்டம்!

கோவையில் பாரா மெடிக்கல் மாணவி தற்கொலை – உறவினர்கள் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – வானதி தம்பதியினரின் மகள் அனுப்பிரியா.

வானதியின் அரவணைப்பில் உள்ள அனுப்பிரியா கோவை இந்துஸ்தான் பாரா மெடிக்கல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை அனுப்பிரியா மருத்துவமனையின் நான்காவது
மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மருத்துவமனை நிர்வாகம், பீளமேடு போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

அனுப்பிரியா நேற்று பணியில் இருந்த போது, உடன் பணியில் இருந்த மாணவனின் 1500 ரூபாய் பணத்தை திருடிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

நீண்ட நேரமாக அனுப்பிரியாவின் மீது திருட்டு பழி சுமத்தி, கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், மனமுடைந்த மாணவி மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே தற்கொலை செய்து கொண்டார்.

வீண் பழி சுமத்தி கல்லூரி நிர்வாகம் கடுமையாக கண்டித்ததாகவும் மாணவியின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continue Reading

Trending