tamilnadu
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
குரங்கம்மை பாதிப்பு இதுவரைக்கும் இத்தியாவில் எங்கும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை நோய்காக சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள 10 படுக்கைகள் கொண்ட தனி சிறப்பு வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தமிழக முக்கிய விமான நிலையங்களில் குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
உலகில் இதுவரை குரங்கம்மையினால் 223 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் குரங்கம்மை நோய்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட குரங்கம்மை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்த 200 பேர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் தொடங்கப்பட உள்ளது.
tamilnadu
தொடர் விடுமுறையால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு!
தொடர் விடுமுறையால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு!
தொடர் விடுமுறை எதிரொலியாக, ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ப்தி.
நாளை சனி, ஞாயிற்று, மிலாடி நபி என தொடர் விடுமுறை மற்றும் முகூர்ந்தநாட்கள் வருவதால் சென்னையில் இருந்து மக்கள் பயணிக்க ஆரம்பித்தனர்.
பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு அதிகப்படியாக செல்வர்.
பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் சொகுசாக செல்வதற்கு ஆம்னி பேருந்துகள் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
tamilnadu
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
கடந்த 2 மாதங்களில் 10-வது சம்பவம் இது.
அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நிபுணர்கள் சோதனை செய்த போது வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என தெரிய வந்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
india
ஆதார் புதுப்பிக்க செப்.14 கடைசி நாள் என்பது வதந்தி – ஆதார் ஆணையம் விளக்கம்!
ஆதார் புதுப்பிக்க செப்.14 கடைசி நாள் என்பது வதந்தி – ஆதார் ஆணையம் விளக்கம்!
ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 தேதியே கடைசி நாள் என்பது தவறான தகவல் என ஆதார் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாகும்.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்றது ஆதார் ஆணையம்.
செப்.14 வரை தான் கால அவகாசம் உள்ளது என தகவல் பரவியது.
தற்போது இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது,.
ஆதார் இணையதளத்தில் முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக முகவரி மாற்றத்தைப் பதிவு செய்யலாம்.
புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில்தான் இருக்கும். சேவைகள் எதுவும் பாதிக்காது.
செப்டம்பர் 14ம் தேதிக்கு புதுப்பித்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதாரை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் ரத்தாகிவிடும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
ஆதார் புதுப்பிக்க இம்மாதம் 14ம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி.
இவ்வாறு ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
cinema2 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
Employment2 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized3 months ago
Hello world!
-
cinema2 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu2 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india2 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
Employment1 month ago
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள்
-
india2 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்