Connect with us

tamilnadu

AI மூலம் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி

Published

on

AI மூலம் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி

திமுக பவள விழாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்த்துரை வழங்கினார்.

திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பேரறிஞர்’ அண்ணா பிறந்தநாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது.

மாநாட்டில் 80,000 தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

50 அடியில் திமுக கொடி பறக்க விடப்பட்டுள்ளது பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 5,000 வாழை மரங்கள் தோரணங்களாக வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அமர்ந்திருப்பதை போல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வாழத்துரை வழங்கினார்.

என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என அதே கரகர குரலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியதால் அரங்கமே அதிர்ந்து மக்களை புத்துணவுர்வு ஏற்படுத்தியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

Published

on

By

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது - சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு மொழிக் கொள்கையை மீறுகிறதா? என மிழ்நாட்டிற்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,154 கோடி என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளில் தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் பிராந்திய மொழி என்பதன் கீழ் செயல்படுத்தி வருவதாகவும்,

தமிழக பள்ளிகளில் தமிழ் ஒரு மொழி பாடமாக இருப்பதை மத்திய அரசு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2024-2025 நிதியாண்டுக்கான 4305.66 கோடி ரூபாய் வழங்க திட்ட ஒப்புதல் வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்பதையும் மத்திய கல்வி இணை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்

 

Continue Reading

india

தவெக நெல்லை மாவட்டச் செயலாளர் மரணம் – விஜய் இரங்கல்!

Published

on

By

தவெக நெல்லை மாவட்டச் செயலாளர் மரணம் - விஜய் இரங்கல்!

தவெக நெல்லை மாவட்டச் செயலாளர் மரணம் – விஜய் இரங்கல்!

திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் சாஜி (எ) அந்தோணி சேவியர்.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தனது நண்பரை சந்திக்க நேற்று இரவு சென்று நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராற்விற்காக அனுப்பி வைத்தனர்.

கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜய் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சஜி (எ) B.அந்தோணி சேவியர் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. என் மீதும் கட்சியின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கட்சிப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Continue Reading

india

தமிழக பட்ஜெட் – திருமாவளவன் எம்.பி பாராட்டு!

Published

on

By

தமிழக பட்ஜெட் - திருமாவளவன் எம்.பி பாராட்டு!

தமிழக பட்ஜெட் – திருமாவளவன் எம்.பி பாராட்டு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அங்கீகார பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

“தேர்தல் அங்கிகார வெற்றி விழா வருகின்ற 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மார்ச் 16ஆம் தேதி திருவண்ணாமலையில் பெண்கள் சார்பில் கூட்டம் நடைபெறவுள்ளது.

800 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கவுள்ளது குறித்து முதல்வருக்கு நன்றி சொல்கிறோம்.

டாஸ்மாக்கில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் அமலாக்கத்துறை அதனை சட்டபூர்வமாக அணுகும், அதனை டாஸ்மாக் நிறுவனம் சட்டப்பூர்வாக எதிர்க்கொள்ளும்.

பட்டியலின இளைஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது சாதி அமைப்புகள் தான் காரணம். ரூ என்பது வழக்காமாக பயன்படுத்துவதுதான்.

புதிதாக ஒன்றும் இல்லை. கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்”

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending