india
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு- இயக்குநர் மோகனுக்கு ஜாமின்!
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு – இயக்குநர் மோகனுக்கு ஜாமின்!
திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது 5பிரிவுகளில் வழக்கு பதிவு பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம் உள்ளதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தெரிவித்திருந்தார்.
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பேசியதாக இயக்குநர் மோகன் ஜியை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் இன்று சென்னையில் கைது செய்தனர்.
இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் அவருக்கு சொந்த பிணையில் விடுவித்துள்ளது.
india
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
சில நாட்களுக்கு முன், தனது உடல்நிலை குறித்த வதந்திகளை அவர் மறுத்திருந்தார். தற்போது, வயது தொடர்பான வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
india
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இன்று அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
india
லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!
லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!
லெபனானின் தென்மேற்கு பகுதிகளிலும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் dஅமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்தது.
தற்போதுவரை பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இஸ்ரேலின் மொத்த கவனமும் ஹமாஸ் பக்கத்திலிருந்து, ஹிஸ்புல்லா பக்கம் திரும்பியுள்ளது.
இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது ஈரான். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் தொடங்கியது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
“தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம் 146-ஆவது பிரிவு ரிசர்வ் படையினர் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் ‘பயங்கரவாத’ நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Employment3 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema3 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
Uncategorized3 months ago
Hello world!
-
tamilnadu3 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema3 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
india3 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india3 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
Employment2 months ago
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள்