Connect with us

india

தாமிரபரணி ஆற்றுக்கு உரிமை கோரும் நெல்லை மாநகராட்சி – கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

Published

on

தாமிரபரணி ஆற்றுக்கு உரிமை கோரும் நெல்லை மாநகராட்சி – கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

மாநகராட்சி எல்லைக்குள் 17 கி.மீ தூரம் பயணிக்கும் தாமிரபரணி ஆற்றில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் நேரடியாகக் கலக்கிறது. தாமிரபரணி ஆற்று நீரில் கழிவுகள் கலப்பதால் குடிக்கும் தரத்தில் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, 2018ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

“திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

நீதிபதிகள், “தாமிரபரணி ஆற்றுக்கு உரிமை கோரும் நெல்லை மாநகராட்சி
கடமைகளையும் பொறுப்பெடுத்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி

Published

on

By

ratan tata health condition

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

சில நாட்களுக்கு முன், தனது உடல்நிலை குறித்த வதந்திகளை அவர் மறுத்திருந்தார்.  தற்போது, வயது தொடர்பான வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.

Continue Reading

india

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

By

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

Continue Reading

india

லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!

Published

on

By

லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!

லெபனானின் தென்மேற்கு பகுதிகளிலும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் dஅமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்தது.

தற்போதுவரை பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இஸ்ரேலின் மொத்த கவனமும் ஹமாஸ் பக்கத்திலிருந்து, ஹிஸ்புல்லா பக்கம் திரும்பியுள்ளது.

இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது ஈரான். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் தொடங்கியது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

“தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம் 146-ஆவது பிரிவு ரிசர்வ் படையினர் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் ‘பயங்கரவாத’ நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

Trending