Connect with us

india

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!

Published

on

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 இன்று உயர்ந்து ரூ. 56,800 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் ரூ.50,000 கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி ஒரு சவரன் ரூ.55,000 கடந்து புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலையும் சரியத்தொடங்கியது.

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 7,050-க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 56,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,100 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

india

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி

Published

on

By

ratan tata health condition

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

சில நாட்களுக்கு முன், தனது உடல்நிலை குறித்த வதந்திகளை அவர் மறுத்திருந்தார்.  தற்போது, வயது தொடர்பான வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.

Continue Reading

india

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

By

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

Continue Reading

india

லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!

Published

on

By

லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!

லெபனானின் தென்மேற்கு பகுதிகளிலும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் dஅமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்தது.

தற்போதுவரை பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இஸ்ரேலின் மொத்த கவனமும் ஹமாஸ் பக்கத்திலிருந்து, ஹிஸ்புல்லா பக்கம் திரும்பியுள்ளது.

இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது ஈரான். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் தொடங்கியது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

“தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம் 146-ஆவது பிரிவு ரிசர்வ் படையினர் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் ‘பயங்கரவாத’ நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

Trending