india
மெரினா விமான சாகச நிகழ்வு – யாரும் அரசியல் செய்ய வேண்டாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
மெரினா விமான சாகச நிகழ்வு – யாரும் அரசியல் செய்ய வேண்டாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் 240-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விமானப்படை சாகசத்தை பார்க்க வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராத ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
india
“யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது” – தவெக தலைவர் விஜய் கண்டனம்!
“யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது” – தவெக தலைவர் விஜய் கண்டனம்!
சென்னை கிண்டி புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் இளைஞர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது டீவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.
சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
india
ஜனவரி முதல் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்!
ஜனவரி முதல் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்!
2025 ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
ரூபாய் 17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், சுக்கில நத்தம் கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
குருந்த மடம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டியையும், ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,
“உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம்
ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
கடவுள் என்னை எத்தனை நாட்களுக்கு ஓட விடுகிறாரோ, அத்தனை நாட்களும் உங்களுக்காக நான் ஓடிக்கொண்டே இருப்பேன்” என பேசினார்.
india
மருத்துவருக்கு கத்தி குத்து – துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேரில் ஆய்வு!
மருத்துவருக்கு கத்தி குத்து – துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேரில் ஆய்வு!
சென்னை கிண்டி புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் இளைஞர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற சிகிச்சைகள் அளிக்கப்படாது.அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்றுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மீண்டும் எங்கேயும் நடந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் உதயநிதி ஸ்டாலினே நேரடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Employment4 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized5 months ago
Hello world!
-
cinema4 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu4 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema4 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
india4 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india4 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
Employment3 months ago
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள்