india
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!
தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
DA என கூறப்படும் அகவிலைப்படி மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு இரண்டாம் அகவிலைப்படியான அக்டோபர் அல்லது நவம்பர் மாத்ததில் அறிவிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வழிவகுக்கும்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை மாதம் அறிவிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதமாக அதிகரித்தது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
india
பஹல்காம் தாக்குதல்: இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் கவலை

பஹல்காம் தாக்குதல்: இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் கவலை
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் இந்தியாவிலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ராணுவத்திற்கு முழு operational சுதந்திரம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் தரப்பில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார், பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக இந்தியா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார். தாக்குதல் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும், இருப்பினும் இந்தியா மோதல் போக்கைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
india
14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.இந்த போட்டியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், ராகுல் தெவாத்தியா 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் 50 ரன்களுடனும், ஷாருக் கான் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் புகுந்தனர்.குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 4 ரன்களில் வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முக்கிய நாயகனாக பார்க்கப்படுபவர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தான். அவர் தனது அதிரடியான சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது. தற்போது வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.சிறு வயதிலேயே இத்தகைய பெரிய சாதனையை நிகழ்த்திய வைபவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
india
தேமுதிக கட்சியில் விஜயகாந்த் மகனுக்கு முக்கிய பொறுப்பு

தேமுதிக கட்சியில் விஜயகாந்த் மகனுக்கு முக்கிய பொறுப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்தனர்
விஜயகாந்தின் மூத்த மகனான விஜயபிரபாகரன், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், கட்சியின் இளைஞர் அணியை வலுப்படுத்தவும், இளைஞர்களின் ஆதரவை திரட்டவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் இளைஞர் அணி செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ், கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயபிரபாகரனுக்கு முழு ஒத்துழைப்பு தந்து தேமுதிகவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார்
-
Employment10 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema10 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized10 months ago
Hello world!
-
cinema10 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu10 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india6 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india10 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
india10 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்