tamilnadu
2026-ல் அதிமுக ஆட்சி தான்” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

2026-ல் அதிமுக ஆட்சி தான்” – எடப்பாடி பழனிசாமி பேச்சு
நான் ஜோசியராகிவிட்டேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார், ஜோசியம் பலிக்கும் என சேலம் மாவட்டம் சித்தூரில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசியதாவது:
”மு.க.ஸ்டாலின் அவர் செய்த சாதனையை நம்பி மக்களை சந்திக்கவில்லை.
திமுகவின் சாதனையை நம்பி அவர்கள் தேர்தலில் நிற்பதாக தெரியவில்லை.
கூட்டணிக் கட்சிகளை நம்பித்தான் அவர்கள் தேர்தலை சந்திக்கிறார்கள்.
அதன் மூலமாகத்தான் வெற்றி பெறுவதாக எல்லா கூட்டத்திலும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
நாம் பேசவில்லை அவர்தான் பேசுகிறார். எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி; எங்கள் கூட்டணியில் விவாதங்கள் இருக்கும் பிரிவு இருக்காது என்றும் முதலமைச்சர் பேசுகிறார்.
கிராமத்தில் சொல்பவர்கள் ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்ல’ என்று இப்படித்தான் திமுக தலைவர் பேசி வருகிறார்.
கூட்டணி வலுவாக இருக்கிறது வலுவாக இருக்கிறது என பேசி வருகிறார்கள்.
அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் திமுக அரசின் ஆட்சியைக் கடந்த 41 மாதமாக விமர்சனம் வைக்கவில்லை.
ஆனால் இப்பொழுது விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் என்று சொன்னால் அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தானே அர்த்தம்.
அப்படித்தானே புரிந்து கொள்ள முடியும். அதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் ஜோசியராகிவிட்டேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார்,
ஜோசியம் பலிக்கும், 2026ல் அதிமுக ஆட்சிக்கு வரும்”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
india
பாஜக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

பாஜக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!
பாஜக சார்பில் நடக்கும் இஃப்தார் நோன்பு குறித்து சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.
சென்னையில் மூன்றாவது முறையாக இப்தார் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் நடத்தாத வகையில் சென்னை எழும்பூரில் இஃப்தார் நோன்பு நாளை மாலை 4:30 மணிக்கு தொடங்க உள்ளது.
கூட்டணி கட்சித் தலைவர்கள் அதில் பங்கேற்க உள்ளார்கள்.
பாஜகவின் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
உண்மையான இஸ்லாமியர்கள் யார் பொய்யான இஸ்லாமியர்கள் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் திமுக இருக்கிறது என்றால் மோசமானது.
திமுகவின் அரசியலை இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள்.
அனைத்துக் கட்சியையும் நாங்கள் மதிக்கிறோம் கல்வி, பொருளாதாரம், அரசியலுக்கான முன்னெடுப்பு குறித்த அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு கூறினார்கள்.
india
இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!
கொல்கத்தா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று கோலகலமாக தொடங்குகிறது.
தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
தொடக்க நிகழ்ச்சியில் பாடகா்கள் ஷ்ரேயா கோஷல், கரண் அஜ்லா, பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சிகள் மாலை 6 மணியளவில் தொடங்கி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.
மொத்தம் 70 போட்டிகளை கொண்ட லீக் சுற்று, மே 18ம் தேதி முடிகிறது.
இன்றைய ஆட்டத்திற்காக கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
india
தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!
ரமலான் நோன்பினை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
“புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.
வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கொண்டாடப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இஸ்லாமிய பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Employment9 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized9 months ago
Hello world!
-
cinema9 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu9 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema9 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india4 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india9 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india8 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்