Connect with us

cinema

நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published

on

நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் டெல்லி கணேஷ் ராமாவரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

திரைத்துறை, சின்னத்திரை என பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த திரையுலக பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டெல்லி கணேஷ் மறைவிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் கடித்ததில் குறிப்பிட்டுள்ளதாவது;

“மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ் . 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.

கருணாநிதியின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

cinema

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

Published

on

By

ரஜினியின் 74வது பிறந்தநாள் - கருங்கல் சிலை வழிபாடு!

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

நடிகர் ரஜினி தீவிர ரசிகர் ஒருவர் 74வது பிறந்தநாளை 300 கிலோ எடையில் அவரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினியின் மீது கொண்டுள்ள தீவிர அன்பால் ‘அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்’ என்ற பெயரில் கோயில் உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.

ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் புதிய ரஜினி சிலை ஒன்றை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

250 கிலோ எடையில் ரஜினி சிலை உள்ளது குறிப்பிடதக்கது.

சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும்.

புதிய சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து, ரஜினி நூற்றாண்டுகள் வாழ வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Continue Reading

cinema

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

Published

on

By

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

புஷ்பா 2′ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் படைத்தது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார்.

ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார்.

இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.

3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.

முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது.

திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக தகவல்.

Continue Reading

cinema

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

Published

on

By

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வசூல் சாதனை செய்யும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களால் படம் வசூலில் அடி வாங்கியது.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது.

படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Continue Reading

Trending