cinema
உலகநாயகன் பட்டம் வேண்டாம் – கமல்ஹாசன் அறிவிப்பு!
உலகநாயகன் பட்டம் வேண்டாம் – கமல்ஹாசன் அறிவிப்பு!
நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் உலகநாயகன் எனும் அடைமொழியை துறந்துள்ளார்.
அறிக்கை ஒன்றை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
” என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பட்டங்களால் (ஆண்டவர்) என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்த இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்களின் பாராட்டின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வு உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது.
திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவன். அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். மேலே குறிப்பிட்டது. போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.
எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். ” என்று கமல்ஹாசன் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னர் நடிகர் அஜித் குமார் இதே போன்று அறிவிப்பை வெளியிட்டார்.
அஜித் குமார் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை துறந்தார். அடுத்ததாக இனி என்னை யாரும் ‘தல’ என அழைக்க வேண்டாம் அஜித்குமார் என்றோ அல்லது AK என்றோ அழையுங்கள் என்று கூறினார்.
அஜித்தின் 50வது பட ரீலீசுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் அஜித் கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பட்டத்தை துறந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
cinema
ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!
ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!
நடிகர் ரஜினி தீவிர ரசிகர் ஒருவர் 74வது பிறந்தநாளை 300 கிலோ எடையில் அவரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு மேற்கொண்டுள்ளார்.
திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினியின் மீது கொண்டுள்ள தீவிர அன்பால் ‘அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்’ என்ற பெயரில் கோயில் உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.
ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் புதிய ரஜினி சிலை ஒன்றை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
250 கிலோ எடையில் ரஜினி சிலை உள்ளது குறிப்பிடதக்கது.
சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும்.
புதிய சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து, ரஜினி நூற்றாண்டுகள் வாழ வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
cinema
புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!
புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!
புஷ்பா 2′ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் படைத்தது.
இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார்.
ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார்.
இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது.
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.
3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.
முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது.
திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக தகவல்.
cinema
டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!
டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!
சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வசூல் சாதனை செய்யும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களால் படம் வசூலில் அடி வாங்கியது.
ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது.
படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
Employment5 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized6 months ago
Hello world!
-
cinema5 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
cinema5 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu5 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india4 weeks ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india5 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india5 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்