Connect with us

india

பொங்கல் அன்று நடைபெறும் CA தேர்வுகள் / தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வலியுறுத்தினார் – சு.வெங்கடேசன் எம்.பி!

Published

on

பொங்கல் அன்று நடைபெறும் CA தேர்வுகள் / தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வலியுறுத்தினார் – சு.வெங்கடேசன் எம்.பி!

தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்தார்.

பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் வரும் ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழர் பண்டிகைகளான பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தினம், விவசாயிகளுக்கான தினம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன.

தமிழர் பண்டிகை நாட்களில் பட்டயத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

” பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. மத்திய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.

சி.ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர்.

தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

Published

on

By

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!
கொல்கத்தா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று கோலகலமாக தொடங்குகிறது.

தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன.

கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

தொடக்க நிகழ்ச்சியில் பாடகா்கள் ஷ்ரேயா கோஷல், கரண் அஜ்லா, பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சிகள் மாலை 6 மணியளவில் தொடங்கி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.

மொத்தம் 70 போட்டிகளை கொண்ட லீக் சுற்று, மே 18ம் தேதி முடிகிறது.

இன்றைய ஆட்டத்திற்காக கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

Continue Reading

india

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

Published

on

By

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

ரமலான் நோன்பினை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கொண்டாடப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இஸ்லாமிய பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

india

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

Published

on

By

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை மார்ச் 18 பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இணைந்து ராக்கெட் ஒன்றை விண்ணிற்கு கடந்த மார்.14ஆம் தேதி அனுப்பியது.

ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் நாசா விண்வெளி வீரர்கள், சக அமெரிக்கரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு) புளோரிடா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிரங்கியது.

மெக்சிகோ வளைகுடாவில் பாராசூட் உதவியுடன் தரையிரங்கியது.

ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

வீரர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Continue Reading

Trending