Connect with us

india

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை!

Published

on

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை!

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை!

தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கு விற்பனையாகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.

நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640 விற்பனையானது.

இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 280க்கு விற்பனையாகிறது.

இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை ஒரு கிராம் 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

india

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்!

Published

on

By

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.

ஜன.14-ம் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்திலும், ஜன.15-ம் தேதி பாலமேட்டிலும், ஜன.16-ம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.

முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்றது.

காளைகள் எண்ணிக்கை அவனியாபுரத்தில் 2,026 , பாலமேட்டில் 4,820, அலங்காநல்லுார் 5,786 என பங்கேற்க பதிவாகியுள்ளது.

மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை அவனியாபுரம் 1,735, பாலமேடு 1,914, மற்றும் அலங்காநல்லுார் 1,698ஆக பதிவாகியுள்ளது.

விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், சோதனை மையம், ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.

ல்வேறு கட்டுப்பாடுகளை மாடுபிடி வீரர்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.

Continue Reading

india

பொங்கல் திருநாளையொட்டி 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

By

பொங்கல் திருநாளையொட்டி 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் திருநாளையொட்டி 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி
யணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் “தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்” வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

மாதாந்திர பதக்கப்படி ரூ.400/-, 2025 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்” வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்”.

Continue Reading

Employment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு!

Published

on

By

AIADMK boycotts Erode East constituency by-election!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டி மற்றும் தங்கள் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

திமுக சார்பில் வி.சி.சந்திரசேகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக போட்டியிடாது எனவும் அக்கட்சியியின் பொதுச்செயலாளலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Trending