cinema
ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!
நடிகர் ரஜினி தீவிர ரசிகர் ஒருவர் 74வது பிறந்தநாளை 300 கிலோ எடையில் அவரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு மேற்கொண்டுள்ளார்.
திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினியின் மீது கொண்டுள்ள தீவிர அன்பால் ‘அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்’ என்ற பெயரில் கோயில் உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.
ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் புதிய ரஜினி சிலை ஒன்றை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
250 கிலோ எடையில் ரஜினி சிலை உள்ளது குறிப்பிடதக்கது.
சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும்.
புதிய சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து, ரஜினி நூற்றாண்டுகள் வாழ வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
cinema
தளபதி விஜயின் ஜனநாயகன்

தளபதி விஜயின் ஜனநாயகன்
விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்போடு “ஜனநாயகன்”.
தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஜனநாயகன்”.
இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.இப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார்
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது
இந்த படத்தின் ப்ரோமோ டீசர் அல்லது மோஷன் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் இந்த அப்டேட்க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
cinema
அஜித்துக்கு கிடைத்த பத்ம பூஷன் விருது உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித்துக்கு கிடைத்த பத்ம பூஷன் விருது உற்சாகத்தில் ரசிகர்கள்
பத்ம பூஷன் விருதுகள் வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.இந்த விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்
பத்ம பூஷன் விருதை திரௌபதி முர்மு அவர்கள் நடிகர் அஜித்குமாருக்கு வழங்கினார்
இந்த ஆண்டு மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 13 பேர், அவர்களில் அஜித்குமாரும் ஒருவர்.
இந்த நிகழ்வு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்துக்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரம்
அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்குமார்.
அவர் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
அதிக தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும், ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு அவரை ‘அல்டிமேட் ஸ்டார்’ ஆக உயர்த்தியுள்ளது
கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்குப் பிறகு பத்ம பூஷன் விருதை வெல்லும் ஐந்தாவது தமிழ் நடிகர் என்ற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.
இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோர்ட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலாக வந்திருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
அஜித்துடன் அவரது குடும்பத்தினரும் இந்த பெருமைமிகு தருணத்தில் உடனிருந்தனர்.
அவர் குடியரசுத் தலைவர் கையால் விருதை வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
cinema
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!
தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் பாரதிராஜா தனது மகன் மனோஜ் சமுத்திரம், கடல் பூங்கா அல்லு அர்ஜூனா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
2023ஆண்டு தனது தந்தையை வைத்து ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கினார்.
மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
மனோஜ் பாரதிராஜா (48) மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
மனோஜ் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
Employment10 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema10 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized10 months ago
Hello world!
-
cinema10 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu10 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india6 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india10 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
india10 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்