Connect with us

india

தவெக நெல்லை மாவட்டச் செயலாளர் மரணம் – விஜய் இரங்கல்!

Published

on

தவெக நெல்லை மாவட்டச் செயலாளர் மரணம் - விஜய் இரங்கல்!

தவெக நெல்லை மாவட்டச் செயலாளர் மரணம் – விஜய் இரங்கல்!

திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் சாஜி (எ) அந்தோணி சேவியர்.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தனது நண்பரை சந்திக்க நேற்று இரவு சென்று நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராற்விற்காக அனுப்பி வைத்தனர்.

கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜய் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சஜி (எ) B.அந்தோணி சேவியர் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. என் மீதும் கட்சியின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கட்சிப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

india

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Published

on

By

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சட்ட திருத்தத்தின் சில பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது.

வக்ஃபு விவகாரத்தில் லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன.

எழுத்துப்பூர்வ பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்கிறேன். எனவே இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக்கூடாது.

வக்ஃபு என பதியப்பட்ட, வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

மத்திய தரப்பு விளக்கத்தை தரும் வரை ஒரு வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

Continue Reading

india

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

Published

on

By

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் - பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

மும்மொழி கல்வி தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.

இந்தி மொழியும் இனி சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.

மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Continue Reading

india

தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Published

on

By

தீரன் சின்னமலை பிறந்ததினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி

வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை.

மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர்.

தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சிமன்னலையின் பிறந்தநாள் இன்று! அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை! அவர் வீரமும் புகழும் வாழ்க!” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending