Connect with us

india

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுச்சேரியில் பரபரப்பு!

Published

on

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுச்சேரியில் பரபரப்பு!

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் உள்ள‌து துணைநிலை ஆளுநர் மாளிகை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தற்போது ஆளுநர் மாளிகையில் ஓய்வுவெடுத்து வருகிறார்.

மர்ம நபர்கள் ஆளுநர் மாளிகை மின்னஞ்சல் முகவரிக்கு இ-மெயில் மூலமாக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி உடனடியாக, வெடிகுண்டு மிரட்டல் குறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையில் இருந்துகொண்டே ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கு சிறைக்கைதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

india

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Published

on

By

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சட்ட திருத்தத்தின் சில பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது.

வக்ஃபு விவகாரத்தில் லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன.

எழுத்துப்பூர்வ பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்கிறேன். எனவே இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக்கூடாது.

வக்ஃபு என பதியப்பட்ட, வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

மத்திய தரப்பு விளக்கத்தை தரும் வரை ஒரு வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

Continue Reading

india

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

Published

on

By

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் - பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

மும்மொழி கல்வி தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.

இந்தி மொழியும் இனி சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.

மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Continue Reading

india

தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Published

on

By

தீரன் சின்னமலை பிறந்ததினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி

வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை.

மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர்.

தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சிமன்னலையின் பிறந்தநாள் இன்று! அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை! அவர் வீரமும் புகழும் வாழ்க!” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending