Connect with us

india

வாட்ஸாப் மூலம் திமுக திட்டங்களை அறியலாம் – மு.க.ஸ்டாலின்!

Published

on

வாட்ஸாப் மூலம் திமுக திட்டங்களை அறியலாம் - மு.க.ஸ்டாலின்!

வாட்ஸாப் மூலம் திமுக திட்டங்களை அறியலாம் – மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ஆம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திமுக அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.

2021-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிச்சான்றிதழை நம் உயிர்நிகர் கருணாநிதி தன் அண்ணன் அருகே நிரந்தர ஓய்வெடுக்கும் இடத்தில் காணிக்கையாக்கிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே! என்று நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சியை வழங்கிடுவோம்” என்று அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில் திமுக அரசு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியத்துடனான அனைவருக்குமான அரசாகத் திகழ்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களும் – கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம்

நலன் தரும் திட்டங்கள் நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திமுக அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களுக்காகப் பணியாற்றுகிற இயக்கம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பேரறிஞர் அண்ணா தலைமையில் நெசவாளர்களின் துயர் துடைத்த இயக்கம் இது. கருணாநிதி தலைமையில் புயல், வெள்ள நிவாரண உதவிகளைச் செய்தது நம் கழகம். உங்களில் ஒருவனான என் தலைமையில் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கொரோனா பேரிடர் காலத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவிகள் செய்தோம்

6 முறை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்து, ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தது அரசு. ஏழாவது முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்.

அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் திமுக இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.

மே 3 ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ‘‘நாடு போற்றும் நான்காண்டு – தொடரட்டும் பல்லாண்டு’ என்ற தலைப்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என 1244 இடங்களில் 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்தப் பேச்சாளர்களுக்குக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., இன்று மாலை ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார். சொல்லித் தீராத அளவுக்குச் சாதனைகள் நிறைந்திருப்பதால்தான் இத்தனை இடங்களில் பெருமிதத்துடன் நம்மால் பொதுக்கூட்டங்களை நடத்திட முடிகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன்.

உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல்திட்டங்கள் என் தலைமையில் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். கழகத்தின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறவிருப்பதைக் கழகப் பொதுச்செயலாளர் அறிவித்திருக்கிறார். அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.

அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் நான்காண்டு கால திமுக அரசின் ஆட்சியின் சாதனைகளையும்; அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் ஒவ்வொரு இடத்திலும் எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற முத்திரைத் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைப்பது அவசியமாகும். நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எளிமையாக, இனிமையாக, சுருக்கமாக கேட்பவரைக் கவர்கின்ற வகையில் எடுத்துரைத்தால

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Published

on

By

Prime Minister Modi's speech at the G-20 summit

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் தனது உரையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி அவர்கள், வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் என்ற பாகுபாடுகளைத் தாண்டி, அனைத்து மக்களையும், குறிப்பாகச் சர்வதேச தெற்குப் பகுதி (Global South) நாடுகளையும் உள்ளடக்கிய நிலையில், வளர்ச்சியில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில், பிரதமர் மோடி அவர்கள் உலகின் முன்னேற்றத்திற்காகப் பல புதிய முன்மொழிவுகளை முன்வைத்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாதச் சங்கிலித் தொடரைக் கூட்டாகத் தடுத்து நிறுத்துவது குறித்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உலகம் தழுவிய அளவில் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் தேவை என அவர் கோடிட்டுக் காட்டினார். இது ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது.ஆப்பிரிக்கக் கண்டத்தின் அபாரமான ஆற்றலை உணர்த்திய பிரதமர், குறிப்பாக ஆப்பிரிக்க இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு (Skill Development) மற்றும் புதிய கல்வி வாய்ப்புகளை வழங்குவது குறித்துப் புதிய திட்டங்களை முன்மொழிந்தார். இதன் மூலம், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி அவர்கள், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் வலுவான நட்பு பாராட்டி வருகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். “இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் துணை நிற்கும்,” என்று அவர் தெளிவாகத் தெரிவித்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சு, சர்வதேச அளவில் இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடாக, அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா, உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாணும் தளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தேசிய மற்றும் உலகச் செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம். நன்றி!

Continue Reading

india

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

Published

on

By

Mr. P. Chidambaram

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

india

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published

on

By

"Thiruma is my friend" Nainar Nagendran Interview!

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.

நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.

பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.

காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending