Connect with us

india

என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர் – ராமதாஸ் திட்டவட்டம்!

Published

on

என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர்

என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர் – ராமதாஸ் திட்டவட்டம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கட்சியின் எதிர்காலம், தலைமைப் பொறுப்பு, கூட்டணி வியூகம், மற்றும் இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து விரிவாகப் பேசினார்.

சென்னையில் ஊடக நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ராமதாஸ், “சமாதானப் பேச்சுவார்த்தை பேசிக்கொண்டிருக்கிறோம். பேசிக்கொண்டே இருப்போம். குருமூர்த்தி சென்னையில் என்னை சந்தித்தார். உங்கள் வாழ்த்துக்களோடு முடிவுகள் வரலாம்.

மன்னிப்பு என்பது பிரச்சனை இல்லை,” என்றார். மேலும், “நான் விரும்பியது போல் என்னால் தொடங்கப்பட்ட கட்சி, 96 ஆயிரம் கிராமங்களுக்கு நான் சென்று வளர்த்த கட்சிக்கு என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர்,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அன்புமணியை செயல் தலைவராக நியமித்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாணியைக் குறிப்பதாகக் குறிப்பிட்ட அவர், “கலைஞர் இறக்கும் வரை கட்சிக்கு தலைவராக இருந்தார்,” என்றார். ராமதாஸ், தன்னுடன் நீண்டகாலம் பயணித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சிக்குத் தொண்டு செய்தவர்களுக்கு நல்ல பொறுப்புகளை வழங்கியுள்ளதாகவும், அவை நிரந்தரமானவை என்றும் கூறி, அவர்களின் அச்சத்தைப் போக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸின் புகைப்படம் அகற்றப்பட்டது குறித்துப் பேசிய ராமதாஸ், “உங்களின் 25வது திருமண நாளில் உங்கள் குழந்தை வரவில்லை என்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்கு இருந்தது. அன்புமணி புகைப்படம் அகற்றப்பட்டது விஷமத்தனமானது,” என்றார். புகைப்படத்தை யார் கிழித்தார்கள் என்பது தனக்கே தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், “தமிழ்நாடு மக்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்து வரும் தலைவர்களை கொச்சைப் படுத்தக்கூடாது.

மேலும் அரசியல் கட்சி நடத்துபவர்களை கேட்டுக்கொள்கிறேன். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மாற்று கருத்து சொல்லலாம். ஆனால் தலைவர்களை கொச்சைப்படுத்தக்கூடாது,” என்று வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் அருளின் கருத்தை சரியானதாகக் குறிப்பிட்டார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி, என்ன முடிவு எடுக்கலாம் என நிர்வாகிகள் ஆலோசனை கேட்கப்படும் என்றார் ராமதாஸ். பொதுக்குழுவுக்கு முன்பாக செயற்குழு, நிர்வாகக் குழு கூடும் எனவும், “தேர்தல் சம்பந்தமான யுத்திகள், யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வது பொதுக்குழு தான்.

தேவைப்படும் நேரத்தில் பொதுக்குழு கூட்டி கருத்து கேட்டு முடிவெடுப்போம்,” எனவும் தெரிவித்தார். அன்புமணி செயல் தலைவர் பொறுப்பை ஏற்றால் பிரச்சனை முடிந்தது எனவும், அவர் தலைவர் பொறுப்பை 3 ஆண்டுகள் வைத்திருந்தார் எனவும் குறிப்பிட்டார்.

“நாகரீகம், நளினமாக என்ற வார்த்தையை கருணாநிதியிடம் கற்றுக்கொண்டேன். என் மூச்சு இருக்கும் வரை தலைவராக இரு என மனசு சொன்னது. பதவி சுகத்தை விரும்பி இருந்தால் மத்தியில் எந்தப் பொறுப்பும் எனக்கு கிடைத்திருக்கும். பல பிரமுகர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளேன். பிரதமர் மோடியும் என்னோடு நட்பாக இருந்துள்ளார். சேலத்தில் கட்டிப்பிடித்து மோடி அன்பை வெளிக்காட்டினார்,” என்று தனது தனிப்பட்ட உறவுகளைப் பற்றிப் பேசினார்.

“பலரை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுபினராக, மத்திய அமைச்சராக ஆக்கியுள்ளேன். கட்சிக்காரர்களை உயர்த்தி பார்த்தவன் நான். இன்றைக்கு என் மனசு மூச்சுக்காற்று இருக்கும் வரைக்கும் நீ தான் கட்சியின் தலைவர் இரு என மனசாட்சி சொன்னது. கட்சி தலைவர் பதவி ஒன்றும் பெரிய பதவி இல்லை. அதனை ஏற்கக்கூடாதா? என் மூச்சு காற்று அடங்கிய பிறகு அந்த பொறுப்புக்கு முகுந்தனோ, சுகந்தனோ வரப்போவதில்லை.

யார் வருவார்கள் என எல்லோருக்கும் தெரியும். அன்புமணி ஆதரவாளர்களின் நிலை அவர்களின் மனசாட்சி படி நடக்கும். ஜி.கே.மணி அவருடைய உழைப்புக்கு ஈடாக யாரையாவது சொல்ல முடியுமா. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளார்.” என்றார்.

இறுதியாக, இட ஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்போம் எனக் குறிப்பிட்ட ராமதாஸ், “மிகப்பெரிய போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ்நாடு தாங்காத அளவுக்கு போராட்டம் இருக்கும். ஆனால் அந்த அளவுக்கு போகாமல் தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். நாங்கள் 10.5 சதவீதம் தான் கேட்கிறோம். கொடுக்கலாமே. இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Published

on

By

Prime Minister Modi's speech at the G-20 summit

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் தனது உரையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி அவர்கள், வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் என்ற பாகுபாடுகளைத் தாண்டி, அனைத்து மக்களையும், குறிப்பாகச் சர்வதேச தெற்குப் பகுதி (Global South) நாடுகளையும் உள்ளடக்கிய நிலையில், வளர்ச்சியில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில், பிரதமர் மோடி அவர்கள் உலகின் முன்னேற்றத்திற்காகப் பல புதிய முன்மொழிவுகளை முன்வைத்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாதச் சங்கிலித் தொடரைக் கூட்டாகத் தடுத்து நிறுத்துவது குறித்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உலகம் தழுவிய அளவில் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் தேவை என அவர் கோடிட்டுக் காட்டினார். இது ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது.ஆப்பிரிக்கக் கண்டத்தின் அபாரமான ஆற்றலை உணர்த்திய பிரதமர், குறிப்பாக ஆப்பிரிக்க இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு (Skill Development) மற்றும் புதிய கல்வி வாய்ப்புகளை வழங்குவது குறித்துப் புதிய திட்டங்களை முன்மொழிந்தார். இதன் மூலம், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி அவர்கள், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் வலுவான நட்பு பாராட்டி வருகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். “இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் துணை நிற்கும்,” என்று அவர் தெளிவாகத் தெரிவித்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சு, சர்வதேச அளவில் இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடாக, அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா, உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாணும் தளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தேசிய மற்றும் உலகச் செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம். நன்றி!

Continue Reading

india

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

Published

on

By

Mr. P. Chidambaram

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

india

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published

on

By

"Thiruma is my friend" Nainar Nagendran Interview!

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.

நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.

பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.

காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending