Connect with us

Uncategorized

ஆப்பிரிக்காவில் சோகம்: டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி!

Published

on

ஆப்பிரிக்காவில் சோகம் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி!

ஆப்பிரிக்காவில் சோகம்: டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி!

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகர் பாங்குயில் செயல்படும் ஓர் உயர்நிலைப் பள்ளியில், நேற்று            (ஜூன் 26, 2025) நடந்த இறுதித் தேர்வின்போது ஏற்பட்ட டிரான்ஸ்பார்மர் வெடிப்பில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தப் பள்ளியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், குண்டு வெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டதால் மாணவர்கள் பீதியடைந்து அங்கும் இங்குமாக ஓடினர். இதைத் தொடர்ந்து, பள்ளி கட்டிடம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தக் கோரச் சம்பவத்தில் 29 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்த கல்வித்துறை உயர் அதிகாரிகள், பள்ளி அருகே சீரமைப்புப் பணி நடந்தபோது டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்துச் சிதறியதே விபத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு அதிபர் பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டுடேரா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published

on

By

"Thiruma is my friend" Nainar Nagendran Interview!

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.

நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.

பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.

காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

india

TNPSC 2 & 2A போட்டித்தேர்வு – 645 காலி பணியிடங்கள்!

Published

on

By

TNPSC 2 & 2A Competitive Exam - 645 Vacancies!

TNPSC 2 & 2A போட்டித்தேர்வு – 645 காலி பணியிடங்கள்!

குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகளுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II (Combined Civil Services Examination-II) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேரூராட்சி உதவி ஆணையர், சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், உள்ளிட்ட குரூப் 2 (நேர்காணல் உள்ள பதவிகள்) மற்றும் குரூப் 2A (நேர்காணல் இல்லாத பதவிகள்) சேவைகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்

645 (குரூப் 2-க்கு 50 பணியிடங்கள், குரூப் 2A-க்கு 595 பணியிடங்கள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 13, 2025

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் இருக்க வேண்டும்.

TNPSC 2 & 2A தேர்வு கட்டணம்: ₹100

சில பிரிவினருக்கு (SC/ST, மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள்) கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

Continue Reading

india

கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

Published

on

By

கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

கவினின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்.

கவின் என்ற இளைஞரின் கொலை, தமிழகத்தில் சாதி மோதல்கள் எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைக் குறித்துப் பேசிய ஒரு அரசியல் தலைவர், இந்தக் கொலையை ஒரு தனிநபர் கொலை என்பதைத் தாண்டி, அது ஒரு ‘சாதி’யின் கொலை என்றும், ‘சட்டம்’ திருப்புவனத்தில் கொலை செய்யப்பட்டுவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற ஆணவக்கொலைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.

கவின் கொலை செய்யப்பட்டதை ‘சாதி’யின் கொலை என்றும், திருப்புவனத்தில் ‘சட்டம்’ கொலை செய்யப்பட்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற ஆணவக்கொலையில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

குடும்பத்திற்குக் கூட அரசுச் சலுகைகள் கிடைக்காது,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கொலை செய்தவரின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களும் செல்லாததாக அறிவிக்கப்படும். அவரது குடும்பத்தினரின் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மற்றும் வாக்காளர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

தலைமுறைக்கு எந்த ஒரு அரசு வேலையும் கிடைக்காது.என கூறினார்.

தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளன என்பதைக் காட்டுவதாகவும், இந்தச் சமூகப் பிரச்சனைகளை வேரறுக்க வலுவான சட்டங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Continue Reading

Trending