india
குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்த போக்குவரத்துக் கழகம்!
குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்த போக்குவரத்துக் கழகம்!
அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதாந்திர குலுக்கல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டும் மற்றும் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட ஏழு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் பயணம் செய்து பயன் பெறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் TNSTC Mobile App மூலம் கிடைக்கிறது.
சுமார் 20,000 பயணச்சீட்டுகள் பயணிகளால் முன்பதிவு செய்யப்படுகின்றன.
முன்பதிவை ஊக்குவிப்பதற்காக ஊக்கத் தொகைத் திட்டம் 2024 ஜனவரி முதல், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர “குலுக்கல் முறை” மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2024 முதல் மே 2024 வரை, ஒவ்வொரு மாதமும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கப்பட்டது.
ஜூன் 2024 முதல் ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
தலா ரூ.10,000-மும், மீதமுள்ள பத்து வெற்றியாளர்களுக்கு ரூ.2,000-மும் வழங்கப்பட்டு வருகிறது.
30 நபர்கள் தலா ரூ.10000-மும், 50- நபர்கள் தலா ரூ.2000- மும் பெற்று பயனடைந்துள்ளனர்.
1). வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறை – 2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும், மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
2). சிறப்பு குலுக்கல் முறை: OTRS-இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். பரிசுகள் “சிறப்பு குலுக்கல்” பொங்கல்-2025 பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வருமாறு சிறப்பு உயர் பரிசுகள் வழங்கப்படும்.
பரிசு தர வரிசை – பரிசுகள்
முதல் பரிசு – இரண்டு சக்கர வாகனம்
இரண்டாவது பரிசு – LED ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி
மூன்றாவது பரிசு – குளிர்சாதனப் பெட்டி.
பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1). வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறை – 2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும், மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
2). சிறப்பு குலுக்கல் முறை: OTRS-இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். பரிசுகள் “சிறப்பு குலுக்கல்” பொங்கல்-2025 பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வருமாறு சிறப்பு உயர் பரிசுகள் வழங்கப்படும்.
பரிசு தர வரிசை – பரிசுகள்
முதல் பரிசு – இரண்டு சக்கர வாகனம்
இரண்டாவது பரிசு – LED ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி
மூன்றாவது பரிசு – குளிர்சாதனப் பெட்டி.
பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
india
ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் தனது உரையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி அவர்கள், வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் என்ற பாகுபாடுகளைத் தாண்டி, அனைத்து மக்களையும், குறிப்பாகச் சர்வதேச தெற்குப் பகுதி (Global South) நாடுகளையும் உள்ளடக்கிய நிலையில், வளர்ச்சியில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.
மாநாட்டில், பிரதமர் மோடி அவர்கள் உலகின் முன்னேற்றத்திற்காகப் பல புதிய முன்மொழிவுகளை முன்வைத்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாதச் சங்கிலித் தொடரைக் கூட்டாகத் தடுத்து நிறுத்துவது குறித்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உலகம் தழுவிய அளவில் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் தேவை என அவர் கோடிட்டுக் காட்டினார். இது ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது.ஆப்பிரிக்கக் கண்டத்தின் அபாரமான ஆற்றலை உணர்த்திய பிரதமர், குறிப்பாக ஆப்பிரிக்க இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு (Skill Development) மற்றும் புதிய கல்வி வாய்ப்புகளை வழங்குவது குறித்துப் புதிய திட்டங்களை முன்மொழிந்தார். இதன் மூலம், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி அவர்கள், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் வலுவான நட்பு பாராட்டி வருகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். “இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் துணை நிற்கும்,” என்று அவர் தெளிவாகத் தெரிவித்தார்.
பிரதமரின் இந்தப் பேச்சு, சர்வதேச அளவில் இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடாக, அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா, உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாணும் தளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தேசிய மற்றும் உலகச் செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம். நன்றி!
india
தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.
தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
india
“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!
“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!
திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.
தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.
நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.
பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.
தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.
காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
india2 years agoராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி
-
Employment2 years agoதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
india10 months agoதிருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழா கோலாகலம்!
-
cinema2 years ago“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized2 years ago
Hello world!
-
tamilnadu2 years agoStaff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema2 years agoஇந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu11 months agoகல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – தமிழ்நாடு அரசு
