world
இந்தியா ருஷ்யா உறவின் மூலம் உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டுவர முடியும் – அமெரிக்க

இந்தியா ருஷ்யா உறவின் மூலம் உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டுவர உத்தேகிக்க முடியும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜூலை 9 ஆம் தேதி, பிரதமர் மோடி அவர்கள், உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு போர்க்களத்தில் இல்லை, பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க முடியும் என்று உக்ரைன் அதிபர் புடின் அவர்களிடம் வலியுறுத்தியதையடுத்து இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், இந்தியா அமெரிக்காவின் “strategical partner” (தந்திரோபாய கூட்டாளர்) என்றும், அவர்களுடன் ருஷ்யா உடனான உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். உக்ரைனில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தருவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி அவர்களின் ரஷ்ய பயணம் குறித்து கேட்டபோது, ஜீன்-பியர் அவர்கள், “இந்தியா எங்கள் தந்திரோபாய கூட்டாளர், அவர்களுடன் ருஷ்யா உடனான உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நேர்மையான மற்றும் திறந்த உரையாடல் நடத்துகிறோம். இது குறித்து நாங்கள் முன்னரவே பேசியுள்ளோம். எனவே, உக்ரைனில் நிலையான மற்றும் நியாயமான அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தருவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த விஷயத்தில் எங்கள் அனைத்து கூட்டாளிகளும் இதை உணர வேண்டியது அவசியம். மேலும், ருஷ்யாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவு, புடின் அவர்களிடம் போரை முடிவிற்கு கொண்டு வர வலியுறுத்த இந்தியாவிற்கு வாய்ப்பளிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
உக்ரைனின் தலைநகர கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதான ஏவுகணை தாக்குதலில் 37 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜீன்-பியர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.
india
மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை மார்ச் 18 பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
india
உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!
சுமார் 3 ஆண்டாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
india
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
ஜன.14-ம் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்திலும், ஜன.15-ம் தேதி பாலமேட்டிலும், ஜன.16-ம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.
முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்றது.
காளைகள் எண்ணிக்கை அவனியாபுரத்தில் 2,026 , பாலமேட்டில் 4,820, அலங்காநல்லுார் 5,786 என பங்கேற்க பதிவாகியுள்ளது.
மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை அவனியாபுரம் 1,735, பாலமேடு 1,914, மற்றும் அலங்காநல்லுார் 1,698ஆக பதிவாகியுள்ளது.
விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், சோதனை மையம், ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.
ல்வேறு கட்டுப்பாடுகளை மாடுபிடி வீரர்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
-
Employment8 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized9 months ago
Hello world!
-
cinema8 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu8 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema8 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india4 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india8 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india8 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்