world
இதுக்கெல்லாம் ஜெயில் தண்டனையா!

நிகழ்வு:
- மியான்மரில் ராணுவ ஆட்சி நடத்தி வரும் அரசு, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய கடை உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
- செல்போன் கடை நடத்தி வந்த பே போ ஸை என்பவர், தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதற்காக கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
- இதுபோலவே, சுமார் 10 கடை உரிமையாளர்கள் ஊதிய உயர்வு வழங்கியதற்காக சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
காரணம்:
- மியான்மரில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
- ராணுவ அரசு, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று கருதுகிறது.
- மேலும், ஊதிய உயர்வு பெற்ற தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக போராடவோ அல்லது போராடுபவர்களுக்கு நிதியுதவி செய்யவோ வாய்ப்புள்ளது என்று ராணுவம் அஞ்சுகிறது.
சாய்னாவுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர் https://tnnews24.com/2024/07/11/president-who-played-badminton/
தாக்கம்:
- கடை உரிமையாளர்கள் சிறை தண்டனை பெற்றதால், அவர்களுடைய கடைகள் மூடப்பட்டுள்ளன.
- இதனால், பல ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
- ஊதிய உயர்வு கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருந்த ஊழியர்கள், தற்போது வேலை இழந்து விரக்தியடைந்துள்ளனர்.
- மியான்மரில் ஏற்கனவே நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு, இந்த சம்பவம் மேலும் எரிபொருள் ஊற்றியுள்ளது.
பொதுவான கண்ணோட்டம்:
- மியான்மரில் ராணுவ ஆட்சியின் கீழ், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் பொருளாதார சுதந்திரம் பலவீனமடைந்து வருகிறது.
- ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதை தடை செய்வது, தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் செயலாகும்.
- இந்த சம்பவம், மியான்மரில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலையின்மைக்கு ஒரு சான்றாகும்.
india
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
ஜன.14-ம் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்திலும், ஜன.15-ம் தேதி பாலமேட்டிலும், ஜன.16-ம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.
முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்றது.
காளைகள் எண்ணிக்கை அவனியாபுரத்தில் 2,026 , பாலமேட்டில் 4,820, அலங்காநல்லுார் 5,786 என பங்கேற்க பதிவாகியுள்ளது.
மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை அவனியாபுரம் 1,735, பாலமேடு 1,914, மற்றும் அலங்காநல்லுார் 1,698ஆக பதிவாகியுள்ளது.
விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், சோதனை மையம், ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.
ல்வேறு கட்டுப்பாடுகளை மாடுபிடி வீரர்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
Employment
சீனாவில் பரவும் புதிய வைரஸ் – முன்னெச்சரிக்கை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

சீனாவில் பரவும் புதிய வைரஸ் – முன்னெச்சரிக்கை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.
லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்
இதன் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் முழுமையாக நீங்கவில்லை.
சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹியூமன் மெடப்னியுமோவைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வைரஸை சுருக்கமாக ஹெச்.எம்.பி.வி என அழைக்கப்படுகிறது.
தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ள மருத்துமனைகளில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும், உயிரிழப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியுள்ளன.
எச்.எம்.பி.வி. தொற்று பரவி உள்ளதா என்பது குறித்து மத்திய சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் அதுல் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
எச்.எம்.பி.வி. தொற்று என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற வைரஸ் போன்றதே. இது இளம்வயதினர் மற்றும் முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும்.
இந்தியாவில் பருவகால புளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
india
அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்!

அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று இரவு 9.51 மணியளவில் காலமானார்.
டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.
தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணியளவில் மன்மோகன் சிங் மறைவையொட்டி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
-
Employment7 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized8 months ago
Hello world!
-
cinema7 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu7 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema7 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india3 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india7 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india7 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்