Connect with us

sports

பாராலிம்பிக்கில் மேலும் ஒரு வெள்ளி – இந்தியா 21 பதக்கங்கள்

Published

on

பாராலிம்பிக்கில் மேலும் ஒரு வெள்ளி – இந்தியா 21 பதக்கங்கள்

குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாராலிம்பிக்கில் இந்தியா 3 தங்கம் 8வெள்ளி 10 வெண்கலம் என 21 பதக்கங்களை பெற்று பதக்கபட்டியலில் 19 இடத்தை பெற்றுள்ளது.

பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் 3 வெண்கலம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர்.

இன்று ஒரே நாளில் 6 பதக்கங்களை கைப்பற்றிய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்றனர்.

இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

இந்தியாவுக்கு 6-ஆவது தங்கம்- பதக்கப்பட்டியலில் 14வது இடத்தில் இந்தியா!

Published

on

By

இந்தியாவுக்கு 6-ஆவது தங்கம்- பதக்கப்பட்டியலில் 14வது இடத்தில் இந்தியா!

பாராலிம்பிக்கில் ஆண்கள் உயரம் தாண்டுதல் T64 பிரிவில் பிரவீன் குமார் தங்கம் வென்றுள்ளார்.

17-ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய வீரர் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றதுடன் ஆசிய சாதனையும் படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு 6-ஆவது தங்க பதக்கம் கிடைத்துள்ளது.

இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களைப் பெற்று 14வது இடத்தில் உள்ளது.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இதே போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

 

Continue Reading

india

பாராலிம்பிக்ஸ் 13வது இடத்த்தில் இந்தியா

Published

on

By

பாராலிம்பிக்ஸ் 13வது இடத்த்தில் இந்தியா

பாராலிம்பிக் போட்டியில் ஆடவர்களுக்கான F51 கிளப் எறிதல் பிரிவின் இந்திய வீரர்களான தரம்பிர் தங்கமும், பிரனவ் சூர்மா வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர்.

இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம், 24 பதக்கங்களுடன் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்றனர்.

சீனா முதலிடத்திலும், 33 தங்கம் உட்பட 74 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 25 தங்கம் உட்பட 63 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

வில்வித்தை பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Continue Reading

india

பாராஒலிம்பிக்கில் பதக்கங்கள் குவிக்கும் இந்தியா

Published

on

By

பாராஒலிம்பிக்கில் பதக்கங்கள் குவிக்கும் இந்தியா

பாராலிம்பிக்கில் இந்தியா 3 தங்கம் 7 வெள்ளி 10 வெண்கலம் என 20 பதக்கங்களை பெற்று பதக்கபட்டியலில் 19 இடத்தை பெற்றுள்ளது.

பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் 3 வெண்கலம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர்.

இன்று ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் தனித்தனியே வாழ்த்துப் பதிவுகள் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது ;

மாரியப்பன் தங்கவேலு

“ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது பாராட்டுதலுக்குரியது”

தீப்தி ஜீவன்ஜி

“பெண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள்! அவர் எண்ணற்ற மக்களின் உத்வேகமாக இருக்கிறார். அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது”

அஜீத் சிங்

“ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அஜீத் சிங்கின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.”

சுந்தர் சிங் குர்ஜார்

“ஆண்களுக்கான ஈட்டி எறிதலில்வெண்கலப்பதக்கத்தை வென்று வந்த சுந்தர் சிங் குர்ஜரின் அர்ப்பணிப்பும், உந்துதலும் சிறப்பானது. அவரின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!”

ஷரத் குமார்

“ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளி வென்றுள்ளார். விளையாட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு பாராட்டுக்கள். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த நாட்டையும் ஊக்குவித்துள்ளார்.”

இவ்வாறு பிரதமர் மோடி அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

Trending