Connect with us

cinema

GOAT திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

Published

on

GOAT திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

தி கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) நாளை திரையிடப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

cinema

நடிகர் விஜய் கொடுத்த ரூ. 1 கோடி…

Published

on

By

Actor Vijay directly contributed Rs. 1 crore as funds.

நடிகர் சங்க கட்டிடப் பணிகள்:

நடிகர் சங்க கட்டிடப் பணிகளை மீண்டும் தொடங்க, தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். மேலும், கூடுதலாக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உதவியுள்ளார்.

நடிகர் சங்க கடனை அடைக்க, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு கலை நிகழ்ச்சியில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய், நடிகர் சங்க கட்டிடத்திற்காக கடனாக அல்லாமல், நேரடியாக ரூ. 1 கோடி நிதியாக வழங்கியுள்ளார்.

Continue Reading

cinema

Goat வசூல் நிலவரம் என்ன?

Published

on

By

Goat வசூல் நிலவரம் என்ன?

மூன்றாவது நாளிலேயே தி கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை கடந்து வசூலித்துள்ளது.

சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வியாழனன் அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது.

இரண்டாவ்து நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் பல திரையரங்குகளிலும் ஹவுஸ்-ஃபுல் காட்சிகளாக ஓடுவதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக இப்படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

cinema

முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி! TVK தலைவர் விஜய் அறிக்கை!

Published

on

By

முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
TVK தலைவர் விஜய் அறிக்கை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே.

எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம்.

இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.

அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது.

இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.

இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.

தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்.

வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Continue Reading

Trending