cinema
GOAT படத்தின் ‘மட்ட’ பாடல் வெளியானது!
GOAT படத்தின் ‘மட்ட’ பாடல் வெளியானது!
விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் மட்ட பாடல் வெளியானது.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் செப்டம்பர் 5ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது.
முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.
30-க்கும் அதிகமான வெளிநாடுகளிலும் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது.
மூன்றே நாட்களில் ஒட்டுமொத்தமாக இப்படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்தது.
13 நாட்களில் மொத்தமாக ரூ.413கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கோட் படத்தின் ‘மட்ட’ எனத் துவங்கும் பாடலின் வீடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா நடனமாடிய இந்த பாடல் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்தில் உற்சாக வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது வீடியோ பாடலாக வெளியாகியுள்ளது.
cinema
நடிகர் அஜித்குமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!
நடிகர் அஜித்குமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!
ஒரு பயணத்தின் போது நடிகர் அஜித்குமார் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
அஜித்குமார் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
நடிகர் அஜித், பயணம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
“ மக்கள் பயணம் செய்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் என்னைப் பொருத்தவரை, பயணமும் ஒரு வகை கல்விதான். மதமும், சாதியும் நாம் சந்திக்காத மனிதரை கூட வெறுக்க வைத்து விடும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அந்த பழமொழியை நான் ஏற்கிறேன். காரணம், நாம் அதில் அடையாளப்பட்டு சிக்கிக்கொள்ளும் போது, நாம் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட சந்தேகத்திற்கு உள்ளாக்குவோம்.
ஆனால் நீங்கள் பயணம் செய்யும் போது, புது வித கலாச்சாரத்தை தெரிந்து கொள்வீர்கள். பல நாட்டு மக்கள், மதத்தினர் உடன் உரையாடுவீர்கள். அப்போது நீங்கள் அவர்கள் மீது அனுதாபம் கொள்வீர்கள். இது உங்களை அதிக புரிதல் உள்ள மனிதராகவும், இரக்கமுள்ள மனிதராகவும், உங்களை மேம்பட்ட மனிதராகவும் மாற்றும்.” என்று பேசி இருக்கிறார்.
cinema
டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!
டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.
படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.
போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில் சமீப நாட்களாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
அஜித் ரசிகர் ஒருவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
“விடாமுயற்சி ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்தால் நானும், என் நண்பர்களும் மதுரையில் இருந்து வந்து உங்களுக்கு ஓட்டு போடுவோம் டிரம்ப்” என வருத்தப்படாத வாலிபர் சங்க பட வீடியோவுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டீம் ஆட்டமேட்டிக் மெசேஜ் அனுப்பியுள்ளது.
“வடக்கு கரோலினா பற்றி முக்கிய தேர்தல் அப்டேட்டுகளை அனுப்பி வைக்கிறேன். நவம்பர் 5ம் தேதி டொனால்டு டிரம்புக்கே வாக்களிக்கவும்” என குறிப்பிடப்பட்டிருந்தது
இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!
cinema
தெலுங்கானாவில் நடந்த மால் திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா மோகன் காயம்
தெலுங்கானாவில் நடந்த மால் திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா மோகன் காயம்:
தெலுங்கானாவின் தோரூரில் நடந்த ஒரு மால் திறப்பு விழாவில், கூட்ட நெரிசலால் மேடை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் நடிகை பிரியங்கா மோகன் உட்பட பலர் காயமடைந்தனர். பிரியங்கா மோகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
மேடை சிறிய அளவிலான கூட்டத்தை மட்டுமே தாங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதிகமானோர் மேடையில் நின்றதால் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியங்கா மோகன் தான் நலமாக இருப்பதாகவும், லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.சினிமாத்துறையினர் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க விழா ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Employment3 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema3 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
Uncategorized3 months ago
Hello world!
-
tamilnadu3 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema3 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
india3 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india3 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
Employment2 months ago
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள்