india
2025ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

2025ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு 2025ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் பண்டிகை நாட்களை பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு பட்டியல் வெளியிடுவது வழக்கம்.
2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது விடுமுறை மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் பொருந்தும்.
ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 16ம் தேதி உழவர் திருநாள், ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினம், பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம், மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10-ம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளி, மே 1ம் தேதி மே தினம் ஆகியவற்றை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
india
எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு மொழிக் கொள்கையை மீறுகிறதா? என மிழ்நாட்டிற்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,154 கோடி என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளில் தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் பிராந்திய மொழி என்பதன் கீழ் செயல்படுத்தி வருவதாகவும்,
தமிழக பள்ளிகளில் தமிழ் ஒரு மொழி பாடமாக இருப்பதை மத்திய அரசு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2024-2025 நிதியாண்டுக்கான 4305.66 கோடி ரூபாய் வழங்க திட்ட ஒப்புதல் வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்பதையும் மத்திய கல்வி இணை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்
india
மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை மார்ச் 18 பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
india
உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!
சுமார் 3 ஆண்டாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
-
Employment8 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema8 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized9 months ago
Hello world!
-
tamilnadu8 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema8 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india4 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india8 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india8 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்