india
அமெரிக்கா, பிரிட்டனுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த ரஷ்யா அதிபர் புதின்!

அமெரிக்கா, பிரிட்டனுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த ரஷ்யா அதிபர் புதின்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் மீதும் ஏவுகணைகள் பாயும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மோதல் வெடித்தது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத் தகவல் வெளியான தனது நாட்டிற்கு ஆபத்து எனச் சொல்லி உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது.
3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன.
இந்திய பிரதமர் மோடி நினைத்தால் இப்போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
போர் இன்னும் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக போரிட, வடகொரிய ராணுவ வீரர்களை ரஷ்யா களமிறக்கியுள்ளது.
போலியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டு வட கொரிய வீரர்களுக்கு ரஷ்ய ராணுவ சீருடைகள், ரஷ்ய ஆயுதங்கள், போரில் ஈடுபடுத்தப்படுவதாக தென்கொரியாவும், உக்ரைனும் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அது உண்மையாகி உள்ளது.
அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணைகளை ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்தது.
ரஷ்யாவும் தனது அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.
ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை மிகவும் பக்கத்தில் இருக்கும் உக்ரைன் மீது ரஷ்யா செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தொலைக்காட்சி மூலம் பேசியுள்ள ரஷ்ய அதிபர் புதின்,
“ரஷ்யாவின் புதிய ஏவுகணையை நிறுத்துவதற்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் முடியாது. இது ஒளியின் வேகத்தைவிட பத்து மடக்கு அதிவேகத்தில் செல்லும். ரஷ்யாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும்.
எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
கடந்த நவம்பர் 21ம் தேதி அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் தங்கள் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தன. இதற்குப் பதிலடியாகவே உக்ரைன் நாட்டில் இருந்த ஒரு ஆயுதக் கிடங்கின் மீது நாங்கள் இப்போது தாக்குதல் நடத்தியிருக்கிறோம்” என்று நேரடியாக எச்சரித்தார்.
india
பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம் என்பது சுவையான மற்றும் சத்தான ஒரு இனிப்பு உணவு.
இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம். பலாப்பழ பாயாசம் செய்வது மிகவும் எளிது.
தேவையான பொருட்கள்
- பலாப்பழம் – 1 கப் (நறுக்கியது)
- பால் – 2 கப்
- சர்க்கரை – 1/2 கப் (தேவைக்கேற்ப)
- ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
- முந்திரி மற்றும் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
செய்முறை
- முதலில், பலாப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- பால் கொதித்ததும், நறுக்கிய பலாப்பழத்தை சேர்க்கவும்.
- பலாப்பழம் வெந்ததும், சர்க்கரையை சேர்க்கவும்.
- சர்க்கரை கரைந்ததும், ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
- பாயாசம் கெட்டியானதும், வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்க்கவும்.
- சூடான அல்லது குளிர்ந்த பலாப்பழ பாயாசம் பரிமாறவும்.
குறிப்பு
- பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருந்தால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
india
“1000 முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

“1000 முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா உரையின் போது குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு 29.10.2024 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தை சேர்ந்தோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் வரும் 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் மட்டும் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
india
திருநெல்வேலி அல்வா விட மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் பேமஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருநெல்வேலி அல்வா விட மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் பேமஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருநெல்வேலியில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரு நாள் பயணமாக நேற்று நெல்லை சென்றார்.
சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் முடிவடைந்த ரூ.1679.75 கோடி பணிகளை திறந்து வைத்தார்.
20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
17 ஆண்டுகள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் பூலித்தேவன்.
வரும் நவம்பர் மாதத்திற்குள் நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித்தேர் ஓடும்.
புதிதாக இரு சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
பாளையங்கோட்டையில் Y வடிவிலான ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.
திட்டங்களுக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
திருநெல்வேலி அல்வா தான் உலகம் முழுவதும் ஃபேமஸ். ஆனால் இப்போது மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் ஃபேமஸாக உள்ளது.
சிப்காட்டில் தொழில்களை தொடங்கி வைத்த போது, அங்கே பணியாற்றும் என் ஊழியர்கள் என்னை அப்பா என்று அழைத்து, “இந்த தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு தருவதற்கு நன்றி” என்று கூறிய போது நான் நெகிழ்ந்து போனேன்.
ஐந்து ஆண்டுகளில் தென்மாவட்ட வளர்ச்சி புலி பாய்ச்சலில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
Employment7 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized8 months ago
Hello world!
-
cinema7 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu7 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema7 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india3 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india7 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india7 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்