india
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஜார்க்கண்ட் தேர்தலில் ஜேஎம்எம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும்,நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆளும் ஜேஎம்எம் கூட்டணி 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டள்ளதாவது,
“ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்.
அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக உருவாக்கினாலும், அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” என பதிவில் பதிவிட்டுள்ளார்
cinema
ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!
ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!
நடிகர் ரஜினி தீவிர ரசிகர் ஒருவர் 74வது பிறந்தநாளை 300 கிலோ எடையில் அவரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு மேற்கொண்டுள்ளார்.
திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினியின் மீது கொண்டுள்ள தீவிர அன்பால் ‘அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்’ என்ற பெயரில் கோயில் உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.
ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் புதிய ரஜினி சிலை ஒன்றை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
250 கிலோ எடையில் ரஜினி சிலை உள்ளது குறிப்பிடதக்கது.
சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும்.
புதிய சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து, ரஜினி நூற்றாண்டுகள் வாழ வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
india
கார்த்திகை தீபத்திருவிழா – மலையேற அனுமதி மறுப்பு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !
கார்த்திகை தீபத்திருவிழா – மலையேற அனுமதி மறுப்பு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு மலையேற அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திருவண்ணமலை வரும் பக்தர்கள் மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது என்றார்.
மண்சரிவை தொடர்ந்து புவியியல், ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார்.
பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
india
பெரியார் நினைவகத்தை கேரளா சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
பெரியார் நினைவகத்தை கேரளா சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
பெரியார் நினைவகத்தின் 100வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வைக்கம் சென்றார்.
கேரளா மாநிலம் வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார்.
-
Employment5 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized6 months ago
Hello world!
-
cinema5 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
cinema5 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu5 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india4 weeks ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india5 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india5 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்