Connect with us

india

போர் நிறுத்த ஒப்பந்தமும் மீறல்! இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பலி

Published

on

போர் நிறுத்த ஒப்பந்தமும் மீறல்! இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தமும் மீறல்! இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது லெபனானுக்கு நிம்மதியை அளித்தது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

போர் நிறுத்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காசா போருக்கு இணையாக போரை முடிவுக்கு கொண்டுவர இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில், ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய தனது போராளிகளை தெற்கு லெபனானில் இருந்து திரும்பப் பெற வேண்டும்.

இஸ்ரேலிய படைகள் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும். எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில், லெபனான் துருப்புக்கள் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் ரோந்து செல்வர்.

வியாழன்று, தெற்கு லெபனானில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

தெற்கு மண்டலத்தில் வாகனங்களில் வந்த “சந்தேக நபர்கள்” மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது.

வான்வழித் தாக்குதலையும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியது.

ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதால் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக லெபனான் ராணுவம் குற்றம் சாட்டியது.

வியாழன் அன்று காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வியாழனன்று காசாவில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறினார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் 130,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலிய தாக்குதல்களில் 44,330 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 104,933 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.

cinema

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

Published

on

By

ரஜினியின் 74வது பிறந்தநாள் - கருங்கல் சிலை வழிபாடு!

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

நடிகர் ரஜினி தீவிர ரசிகர் ஒருவர் 74வது பிறந்தநாளை 300 கிலோ எடையில் அவரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினியின் மீது கொண்டுள்ள தீவிர அன்பால் ‘அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்’ என்ற பெயரில் கோயில் உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.

ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் புதிய ரஜினி சிலை ஒன்றை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

250 கிலோ எடையில் ரஜினி சிலை உள்ளது குறிப்பிடதக்கது.

சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும்.

புதிய சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து, ரஜினி நூற்றாண்டுகள் வாழ வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Continue Reading

india

கார்த்திகை தீபத்திருவிழா – மலையேற அனுமதி மறுப்பு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !

Published

on

By

கார்த்திகை தீபத்திருவிழா

கார்த்திகை தீபத்திருவிழா – மலையேற அனுமதி மறுப்பு – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு மலையேற அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திருவண்ணமலை வரும் பக்தர்கள் மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது என்றார்.

மண்சரிவை தொடர்ந்து புவியியல், ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார்.

பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

Continue Reading

india

பெரியார் நினைவகத்தை கேரளா சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

Published

on

By

பெரியார் நினைவகத்தை கேரளா சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

பெரியார் நினைவகத்தை கேரளா சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

பெரியார் நினைவகத்தின் 100வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வைக்கம் சென்றார்.

கேரளா மாநிலம் வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

Continue Reading

Trending