Connect with us

india

தெற்கு லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

Published

on

தெற்கு லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது.

தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல்.

போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

தாக்குதலில் லெபனான் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீனின் காஸாவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளதாவது:

”இஸ்ரேல் ராணுவத்தினர் உங்களின் கிராமங்கள் மற்றும் இருப்பிடங்கள் அருகிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் தங்குமிடங்களைக் குறிவைத்து வருகின்றனர். அதனால், மறு அறிவிப்பு வரும்வரை உங்களின் சொந்த பாதுகாப்புக்காக உங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென எச்சரிக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

india

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Published

on

By

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சட்ட திருத்தத்தின் சில பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது.

வக்ஃபு விவகாரத்தில் லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன.

எழுத்துப்பூர்வ பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்கிறேன். எனவே இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக்கூடாது.

வக்ஃபு என பதியப்பட்ட, வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

மத்திய தரப்பு விளக்கத்தை தரும் வரை ஒரு வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

Continue Reading

india

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

Published

on

By

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் - பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு உத்தரவு!

மும்மொழி கல்வி தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.

இந்தி மொழியும் இனி சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.

மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Continue Reading

india

தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Published

on

By

தீரன் சின்னமலை பிறந்ததினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி

வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை.

மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர்.

தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சிமன்னலையின் பிறந்தநாள் இன்று! அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை! அவர் வீரமும் புகழும் வாழ்க!” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending