Connect with us

Employment

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

Published

on

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.

Employment

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published

on

By

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நெல்லைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.3,800 கோடி முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார்.

சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாபு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Continue Reading

Employment

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

Published

on

By

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு போலிசார் அனுமதி அளித்துள்ளனர்.

13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை மறுநாள் பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.

தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.

நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading

Employment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு!

Published

on

By

AIADMK boycotts Erode East constituency by-election!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டி மற்றும் தங்கள் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

திமுக சார்பில் வி.சி.சந்திரசேகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக போட்டியிடாது எனவும் அக்கட்சியியின் பொதுச்செயலாளலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Trending