Connect with us

sports

குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி

Published

on

குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி

குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் (IPL) 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

மும்பை அணி, குஜராத்தின் பந்துவீச்சை எதிர்த்துப் போராடி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

229 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத், 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் மும்பை அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ், குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அங்கே அவர்கள், குவாலிஃபயர் 1-ல் தோல்வியடைந்த பஞ்சாப் அணியை எதிர்கொள்கின்றனர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை சந்திக்கும்.

india

கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 44-வது பிறந்தநாள்!

Published

on

By

கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 44-வது பிறந்தநாள்!

கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 44-வது பிறந்தநாள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட வேளையில், 2018-ஆம் ஆண்டு நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்துப் பேசப்பட்டு வருகிறது.

ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம், “உங்களது முதல் காதலியின் பெயர் என்ன?” என்று மேஜிக் மேன் ஒருவர் புதிரான முறையில் யூகிக்குமாறு கேட்டார். எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் அதிகம் பகிர்ந்துகொள்ளாத தோனி, இந்தப் புதிருக்குப் பதிலளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். முடிவில், “அவள் பெயர் ஸ்வேதா” எனக் கூறி தனது முதல் காதலியின் பெயரை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ளாத தோனி, இவ்வாறு ஒரு விளம்பர நிகழ்வில் வெளிப்படையாகப் பேசியது அப்போது பெரும் கவனத்தைப் பெற்றது. இன்றும், அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ரசிகர்கள் அவரது கிரிக்கெட் சாதனைகளுடன் சேர்த்து, இந்தப் புதிரான தனிப்பட்ட வாழ்க்கை அத்தியாயத்தையும் நினைவுகூர்ந்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்து, நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஒரு புரட்சிகரமான செய்தி! இந்தியக் கடற்படையில் முதல் பெண் போர் விமானி: சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா புதிய வரலாறு படைத்தார்!

இந்தியப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியக் கடற்படையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா, இந்தியக் கடற்படையின் முதல் பெண் போர் விமானி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடற்படை விமானப் பிரிவின் மிகக் கடுமையான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து, அவர் இந்தப் பெருமைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பயிற்சி நிறைவில், சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியாவுக்கு ‘தங்கச் சிறகுகள்’ (Golden Wings) என்ற உயரிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது அவரது அசாத்தியத் துணிச்சலுக்கும், அற்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

முன்னர், இந்தியக் கடற்படை விமானப் பிரிவில் பெண் அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாகவும் (Observers), வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களாகவும் (Air Traffic Controllers) மட்டுமே பணியாற்றி வந்தனர். ஆனால், சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா போர் விமானியாகப் பொறுப்பேற்றதன் மூலம், போர் விமானங்களைக் கையாளும் மிக முக்கியப் பொறுப்பிலும் பெண்களுக்கு வழி திறந்துள்ளது. இது, பாதுகாப்புப் படைகளில் பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதற்கான கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. ஆஸ்தா புனியாவின் இந்தச் சாதனை, இளம் பெண்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், கனவுகளைத் துரத்தும் துணிச்சலையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.


Continue Reading

india

ஃப்ரீஸ்டைல் சதுரங்கத்தில் உலக நம்பர் 1 – மேக்னஸ் கார்ல்சன்

Published

on

By

World No. 1 in freestyle chess - Magnus Carlsen

உலக சதுரங்கத்துக்கு புதிய அத்தியாயமாக, நோர்வேச் சதுரங்க வீரரும் உலக நம்பர் 1 ஆவார் மெக்னஸ் கார்ல்சன், தனது நீண்டநாள் கனவாக இருந்த 2900 மதிப்பெணை இலக்கை அடைந்துள்ளார். இது, பாரம்பரிய சதுரங்கத்தில் அல்ல, தற்போதைய ஃப்ரீஸ்டைல் சதுரங்கத்தில் நிகழ்ந்த ஒரு முக்கிய சாதனை.


ஃப்ரீஸ்டைல் சதுரங்கம் – ஒரு புதிய பரிமாணம்

ஃப்ரீஸ்டைல் சதுரங்கம் என்பது பாரம்பரியக் கிளாசிக்கல் சதுரங்கத்திலிருந்து வித்தியாசமானது. இது மாறுபட்ட நடைமுறைகள், புதிய விதிமுறைகள், மற்றும் குறைக்கப்பட்ட நேரங்கள் கொண்டது. இதற்கான மதிப்பெண்களை FIDE வழங்காது. இதற்குப் பதிலாக, இந்த வடிவமைப்பை ஏற்பாடு செய்பவர்கள் தங்களாகவே சிறப்புப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்குகின்றனர்.

Weissenhaus 2024, Singapore 2024, Weissenhaus 2025, Paris 2025 மற்றும் Karlsruhe 2025 ஆகிய ஐந்து முக்கிய போட்டிகள் இந்த மதிப்பீட்டின் அடிப்படையாக இருக்கின்றன.


கார்ல்சனின் சாதனை – வரலாற்று வெற்றி

பாரம்பரிய சதுரங்கத்தில் கார்ல்சன் அடைந்த உயர்ந்த மதிப்பெண் 2882 (2014) தான். ஆனால், 2900 என்ற இலக்கை எட்ட முடியாமல் இருந்தது.
இப்போது, ஃப்ரீஸ்டைல் சதுரங்கத்தில், அவர் 2909 மதிப்பெணை அடைந்து, தனக்கு நீண்ட நாட்களாக இருந்த கனவினை நனவாக்கியுள்ளார்.

Grenke Freestyle Open போட்டியில் 9 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்றது, இந்த வெற்றியின் அடித்தளமாக அமைந்தது.


நகைச்சுவையோடு கூடிய வெற்றிப் பெருமை

செய்தியை கேட்டதும், கார்ல்சன் தனது தனிப்பட்ட பாணியில் நகைச்சுவையுடன் கூறினார்:

இப்போது என் மனைவி என்னை இன்னும் அதிகமாக ஈர்க்கிறாள்.

இந்த வார்த்தைகள் மூலம், இந்த சாதனை அவருக்குப் தனிப்பட்ட பெருமையை அளித்துள்ளது என்பதை உணர்த்தினார்.
அவரது சிரிப்பு பின்னணியில், ஒரு வீரராக அவர் கொண்ட விரிவான முயற்சி, ஆர்வம் மற்றும் நிலைத்த செயல்திறன் இருக்கிறது.

இந்தியாவின் வீரர்கள் – உலக தரவரிசையில் முன்னிலையில்

இந்திய ரசிகர்களுக்குப் பெருமை அளிக்கும் வகையில், பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 4வது இடத்தில் (2773) இருக்கிறார்.
அவரை தொடர்ந்து இந்திய வீரர்களின் நிலைமைகள் பின்வருமாறு:

  • அர்ஜுன் எரிகைசி – 8வது இடம் (2758)

  • விதித் குஜ்ராதி – 18வது இடம் (2713)

  • அரவிந்த் சிதம்பரம் – 22வது இடம் (2707)

  • டி. குகேஷ் – 26வது இடம் (2701)

குகேஷ் தற்போதைய கிளாசிக்கல் சதுரங்க உலக சாம்பியன் என்பதையும், இங்கு comparatively தாழ்ந்த இடத்தில் இருப்பதற்கான காரணம் ஃப்ரீஸ்டைல் சதுரங்கத்தில் குறைவான பங்கேற்பே என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதனையின் புதிய பரிமாணம்

மெக்னஸ் கார்ல்சன் தனது சதுரங்க வாழ்க்கையில், உலக சாம்பியனாக இருப்பதைவிட, 2900 மதிப்பெணையை எட்டுவதே மிகப்பெரிய இலக்காக இருந்தது. இன்று, அது நனவானது.
இதன் மூலம் அவர் புதிய வடிவத்திலும் ஆட்ட ஆளுமையை நிரூபித்துள்ளார்.

ஃப்ரீஸ்டைல் சதுரங்கம், எதிர்கால சதுரங்கத்தின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பாக உருவெடுக்கிறது. இதில் இந்திய வீரர்களும் முக்கிய இடம் பெற்றுள்ளதால், இது சர்வதேச அளவில் இந்தியா திகழும் மேலோங்கலுக்கு ஒரு அடையாளமாகும்.

இந்த சாதனை, சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு அல்ல, ஒரு கலை, ஒரு பயணம், மற்றும் தனி மனித முன்னேற்றத்தின் வழிகாட்டி என்பதையும், மீண்டும் நிரூபிக்கிறது.

Continue Reading

india

‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!

Published

on

By

‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!

‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!

ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் எம்.எஸ்.தோனி இடம்பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவோரை மதிப்புமிக்க ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் கௌரவிக்கப்படும்.

புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோரும் சேர்கப்பட்டுள்ளனர். அதனுடன், பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் சனா மிர் பெற்றுள்ளார். பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்திய வீரர்களாக இந்த கெளரவத்தை பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“தோனி 2007 ஐசிசி உலக டி20 வென்ற கேப்டன், 2011இல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன், 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் ஆவார்.

2009ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றவர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வாழ்த்துக்கள். புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இணையும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆவார்”

 

Continue Reading

Trending