tamilnadu
2 பெண் குழந்தைகள் இருக்கா தமிழ்நாடு அரசு கொடுக்கும் 50,000
திட்டத்தின் நோக்கம்:
- பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்
- பெண் சிசுக் கொலையை ஒழித்தல்
- ஆண் குழந்தை மீதான மோகம் போன்ற தவறான எண்ணங்களை மாற்றுதல்
- சிறு குடும்ப முறையை ஊக்குவித்தல்
யார் விண்ணப்பிக்கலாம்:
- இரண்டு பெண் குழந்தைகள் உள்ள தம்பதிகள்
- தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்கள்
- இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
- தாய் அல்லது தந்தை நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்
பெறக்கூடிய உதவிகள்:
- ஒரு பெண் குழந்தைக்கு ரூ.50,000 டெபாசிட் பத்திரம்
- இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.50,000 டெபாசிட் பத்திரம்
- 18 வயது நிறைவு பெற்றதும் டெபாசிட் தொகையை பெறலாம்
தேவையான ஆவணங்கள்:
- பிறப்பு சான்றிதழ்
- பெற்றோரின் வயது சான்றிதழ்
- பிறப்பு சான்றிதழ் (அரசு மருத்துவரிடம் பெற வேண்டும்)
- குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை சான்று
- வருமான சான்றிதழ்
- ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று
- இருப்பிட சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
- மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது தங்கள் பகுதியில் உள்ள வட்டார சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
கடைசி தேதி:
- இத்திட்டத்திற்கு குறிப்பிட்ட கடைசி தேதி எதுவும் இல்லை.
மற்ற தகவல்கள்:
- தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றிய https://www.tnsocialwelfare.tn.gov.in/ta/node/6526 என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும், உங்கள் அருகில் உள்ள பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் பற்றி தெரிவிக்கவும்.
india
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இன்று அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
india
லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!
லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!
லெபனானின் தென்மேற்கு பகுதிகளிலும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் dஅமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்தது.
தற்போதுவரை பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இஸ்ரேலின் மொத்த கவனமும் ஹமாஸ் பக்கத்திலிருந்து, ஹிஸ்புல்லா பக்கம் திரும்பியுள்ளது.
இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது ஈரான். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் தொடங்கியது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
“தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம் 146-ஆவது பிரிவு ரிசர்வ் படையினர் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் ‘பயங்கரவாத’ நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
india
கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை!
கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை!
சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
மல்லிகைப்பூ ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், ஐஸ் மல்லிகைப்பூ ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் ரூ.300 வரை அதிகரித்துள்ளது.
சாமந்தி பூ கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சம்மங்கி பூ கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செவ்வந்தி கிலோ 200 ரூபாய்க்கும், வெள்ளை செவ்வந்தி கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Employment3 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema3 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
Uncategorized3 months ago
Hello world!
-
tamilnadu3 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema3 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
india3 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india3 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
Employment2 months ago
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள்