Connect with us

business

இன்றைய தங்க விலை (13-07-2024)

Published

on

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.1280 குறைந்தது!

தங்கம்:

  • 24 காரட்:
    • கிராம்: ரூ.7,447 (↑1)
    • சவரன்: ரூ.59,576 (↑128)
  • 22 காரட்:
    • கிராம்: ரூ.6,826 (↑1)
    • சவரன்: ரூ.54,440 (↓160)

வெள்ளி:

  • கிராம்: ரூ.100 (சமம்)
  • பார்: ரூ.1,00,000 (சமம்)

குறிப்புகள்:

  • நேற்று முன்தினம் (ஜூலை 11) 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.59,348-க்கும், 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.54,120-க்கும் விற்பனையானது.
  • நேற்று (ஜூலை 12) 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.59,896-க்கும், 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.54,760-க்கும் விற்பனையானது.
  • தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நகைக்கடைக்கு நகைக்கடை மாறுபடலாம்.

business

ஜி7 உச்சி மாநாடு பங்கேற்க கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

Published

on

By

ஜி7 உச்சி மாநாடு பங்கேற்க கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

ஜி7 உச்சி மாநாடு பங்கேற்க கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்பே ஜி7 (குரூப் ஆஃப் செவன்) ஆகும். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஆண்டுதோறும் ஜி7 உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் ஒன்றில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாடு இன்று (ஜூன் 18, 2025) நிறைவடைகிறது.

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றுள்ளார்.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், கால்கரி நகருக்கு விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் கனடா அதிகாரிகள் வரவேற்றனர். இந்த மாநாட்டில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Continue Reading

business

ஜூன் 30ஆம் தேதி அமலுக்கு வரும் UPI விதிமுறைகள்

Published

on

ஜூன் 30ஆம் தேதி அமலுக்கு வரும் UPI விதிமுறைகள்

ஜூன் 30ஆம் தேதி அமலுக்கு வரும் UPI விதிமுறைகள்

 

இந்தியாவில் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக UPI என்பது மாறிவிட்டது. அதனுடன் சேர்ந்து ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு புதிய விதியை அறிவித்துள்ளது. ஜூன் 30, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.

புதிய விதியின்படி, கூகுள்பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற அனைத்து UPI அடிப்படையிலான செயலிகளும், பணப் பரிவர்த்தனையின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு பெயரை மட்டுமே காண்பிக்கும்.

இனி, பணம் மாற்றுவதற்கு முன், பெறுநரின் அதிகாரப்பூர்வ வங்கி பதிவு செய்யப்பட்ட பெயர் தானாகவே UPI சிஸ்டத்தில் தோன்றும்.

இந்த புதிய விதி, புனைப்பெயர்களுக்குப் பதிலாக அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு பெயரை காட்டுவதன் மூலம் மோசடிகள் செய்வதை மிகவும் கடினமாக்கும்.

பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதன் மூலம், பயனர்கள் பணம் யாருக்கு செல்கிறது என்பதை தெளிவாக உறுதிப்படுத்த முடியும்.

ஒரே பெயருடையவர்களுக்கு தவறுதலாக பணம் மாறுவது போன்ற சம்பவங்கள் இனி குறையும்.

இந்த மாற்றம் மொபைல் எண், UPI ஐடி அல்லது QR குறியீடு ஸ்கேன் செய்வது போன்ற அனைத்து வகையான UPI பரிவர்த்தனைகளுக்கும்பொருந்தும். இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து பிரபலமான UPI கட்டண செயலிகளுக்கும் இது பொருந்தும்.

பணம் செலுத்துவதற்கு முன் திரையில் காட்டப்படும் பெயரை கவனமாக சரிபார்க்கவும். அது அறிமுகமில்லாததாகவோ அல்லது சந்தேகத்திற்குரியதாகவோ தோன்றினால், பரிவர்த்தனையைத் தொடர வேண்டாம்.

நாட்டில் UPI பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில் இந்த புதிய விதி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.

Continue Reading

business

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

Published

on

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை, ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கிகள் அல்லது வங்கியில்லா நிதி நிறுவனங்கள் தங்கத்தின் தூய்மை குறித்து சான்றிதழை வழங்க வேண்டும். இந்த சான்றிதழில் கடன் வழங்குபவர் மற்றும் கடன் பெறுபவர் இருவரும் கையொப்பமிட வேண்டும்.

தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். அடமானம் வைக்கப்படும் தங்க நாணயங்களின் மொத்த எடை 50 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

தனிநபர்கள் ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் பெற முடியும். ஒரு கிலோவுக்கு மேல் உள்ள நகைகளுக்கு கடன் வழங்கப்பட மாட்டாது.

அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் ஆக இருக்க வேண்டும்.

கடன் வாங்குபவருக்கு வழங்கப்படும் அறிவிப்பு காலம், கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு போன்ற அனைத்து தகவல்களும் முழுமையாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 வேலை நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.

இந்த விதிமுறைகள், வங்கிகளின் செயல்பாடுகளை ஓருமைப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான சேவை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி எடுத்த முக்கியமான கட்டுப்பாடுகள் ஆகும். மேலும், தங்க அடகுக் கடன்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சியாகவும் இருக்கிறது.

 

Continue Reading

Trending