Connect with us

india

புனேயில் கடும் மழை: 160 பேர் மீட்பு

Published

on

Heavy rains in Pune: 160 people rescued

புனேயில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, சரிவுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் சிக்கித் தவித்த சுமார் 160 பேரை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்காத்‌ரோடு பகுதியில் உள்ள ஏக்தா நகரில் பலர் வீடுகளில் தண்ணீருக்குள் சிக்கியுள்ளதால், அங்கு இரண்டு என்டிஆர்எஃப் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக என்டிஆர்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை டெக்கன் ஜிம்‌கானா பகுதியில் உள்ள புலச்சி வாடி பகுதியில் கன மழையின் போது மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அதேசமயம், நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் காயமடைந்தார்.

கலெக்டர் சுஹாஸ் திவாஸேயின் உத்தரவின்படி, புனே நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் மூடப்பட்டுள்ளன. மேலும், புனே மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, பாவனா அணையானது புதன்கிழமை பிற்பகலுக்குள் அதன் கொள்ளளவில் 58 சதவீதம் நிரம்பியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

Published

on

By

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது - சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு மொழிக் கொள்கையை மீறுகிறதா? என மிழ்நாட்டிற்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,154 கோடி என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளில் தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் பிராந்திய மொழி என்பதன் கீழ் செயல்படுத்தி வருவதாகவும்,

தமிழக பள்ளிகளில் தமிழ் ஒரு மொழி பாடமாக இருப்பதை மத்திய அரசு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2024-2025 நிதியாண்டுக்கான 4305.66 கோடி ரூபாய் வழங்க திட்ட ஒப்புதல் வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்பதையும் மத்திய கல்வி இணை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்

 

Continue Reading

india

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

Published

on

By

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் - நாசா அறிவிப்பு!

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை மார்ச் 18 பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Continue Reading

india

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

Published

on

By

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

சுமார் 3 ஆண்டாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார்.

சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.

Continue Reading

Trending