Connect with us

india

வாட்ஸ்அப்பில் ஒரு கிளிக்கில் ஆதார், பான் கார்டு டவுன்லோட்!

Published

on

Aadhaar, PAN card download in one click on WhatsApp!

உங்கள் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த வசதி அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எப்படி செய்வது?

  1. உங்கள் மொபைலில் 9013151515 என்ற நம்பரை “MyGov” அல்லது “DigiLocker” என்ற பெயரில் சேமித்து வைக்கவும்.
  2. சேமித்த நம்பருக்கு “Hi” என்று மெசேஜ் அனுப்பவும்.
  3. கிடைக்கும் பதிலில் “DigiLocker services” என்பதை தேர்வு செய்யவும்.
  4. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு உங்கள் கணக்கை சரிபார்க்கவும்.
  5.  உங்கள் DigiLocker கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, லைசென்ஸ் போன்ற ஆவணங்களை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Related Topics: 
ஆகஸ்ட் 15-ல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 https://tnnews24.com/2024/08/08/sslv-d-3-will-launch-on-august-15/

ஏன் இந்த வசதி?

  • இனி இணையதளத்தில் லாகின் செய்து ஆவணங்களை தேட வேண்டிய அவசியமில்லை.
  • சில கிளிக்குகளில் ஆவணங்களை டவுன்லோட் செய்யலாம்.
  • டிஜிலாக்கர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாட் என்பதால் உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த வசதியை பயன்படுத்த நீங்கள் DigiLocker கணக்கை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், முதலில் DigiLocker கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.

india

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியும் பக்தர்கள்!

Published

on

By

முருக பக்தர்கள் மாநாடு - மதுரையில் குவியும் பக்தர்கள்!

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியும் பக்தர்கள்!

மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது

மதியம் 3 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க வாகனங்களில் வருகை தருகின்றனர்.

15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த்தொட்டிகள், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், உடனடி சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ளன.

இன்று மதியம் தொடங்கப்பட உள்ள நிலையில் பக்தர்கள் தற்போதே குவியத் தொடங்கியுள்ளனர்.

Continue Reading

india

இன்றைய சமையல் : மஞ்சள்பாறை மீன் குழம்பு

Published

on

By

மஞ்சள்பாறை மீன் குழம்பு

காரசாரமான மஞ்சள்பாறை மீன் குழம்பு!

மஞ்சள்பாறை மீன் குழம்பு, அதன் தனித்துவமான சுவைக்காகவும், ஊறிப்போன மசாலாக்களுக்காகவும் மிகவும் விரும்பப்படும் ஒரு உணவு. இதோ அதன் சுவையான செய்முறை:

மஞ்சள்பாறை மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • மஞ்சள்பாறை மீன் – 500 கிராம் (துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்தது)
  • நல்லெண்ணெய் – 4-5 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 15-20 (உரித்தது)
  • பூண்டு – 8-10 பல் (தட்டியது அல்லது நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2-3 (கீறியது, காரத்திற்கு ஏற்ப)
  • தக்காளி – 1 பெரியது (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் (உங்கள் காரத்திற்கு ஏற்ப)
  • மல்லித்தூள் (தனியா தூள்) – 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு (சுமார் 1/2 கப் கெட்டியான புளிக்கரைசல்)
  • தேங்காய் பால் – 1/2 கப் (கெட்டியானது, விரும்பினால்)
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு (நறுக்கியது)
  • தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • (சற்று காரம் அதிகம் தேவைப்பட்டால் 2-3 சின்ன வெங்காயம்)

செய்முறை:

  • சுத்தம் செய்த மீன் துண்டுகளில் சிறிது மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • அரைக்க வேண்டிய பொருட்களை (தேங்காய் துருவல், சீரகம், சோம்பு, சின்ன வெங்காயம்) சிறிதளவு தண்ணீர் சேர்த்து மழமழவென்று அரைத்து தனியாக வைக்கவும்.
  • ஒரு அகன்ற மண் சட்டி அல்லது கனமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நல்லெண்ணெய் மீன் குழம்புக்கு கூடுதல் சுவை தரும்
  • எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
  • கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை, உரித்த சின்ன வெங்காயம் மற்றும் தட்டிய பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும்.
  • கீறிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • அடுப்பை குறைத்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாவின் பச்சை வாடை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். மசாலா கருகாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • இப்போது, கெட்டியான புளிக்கரைசலை சேர்த்து, ஒரு கொதி வர விடவும்.
  • அரைத்த மசாலா சேர்ப்பதாக இருந்தால், இந்த நேரத்தில் அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (குழம்பின் பதத்திற்கு ஏற்ப, பொதுவாக 2-3 கப்), குழம்பை மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். இதனால் மசாலா வாடை குறைந்து, குழம்பு கெட்டியாகும்.
  • குழம்பு நன்கு கொதித்து, வாசனையானதும், அடுப்பை முற்றிலும் குறைத்து, ஊறவைத்த மீன் துண்டுகளை மெதுவாகச் சேர்க்கவும்.
  • மீனை சேர்த்த பிறகு அதிக நேரம் கிளற வேண்டாம், மீன் உடைந்துவிடும்.
  • மீனைச் சேர்த்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு 5-7 நிமிடங்கள் சமைக்கவும். மீன் மிக விரைவாக வெந்துவிடும்.
  • மஞ்சள்பாறை மீன் குழம்பை சூடான சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் பரிமாறி மகிழுங்கள்!
Continue Reading

india

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Published

on

By

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

கடந்த 13ம் தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இரு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதல் நாடு ஈரான்தான்

அமெரிக்க ராணுவத்தினர் ஈரானின் அணு ஆயுத நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

அமைதி அல்லது பெருந்துயரம் இரண்டு வாய்ப்புகளே இரண்டு வாய்ப்புகளே ஈரானுக்கு உள்ளது.

ஈரானின் அச்சுறுத்தலை தடுக்க நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

Continue Reading

Trending