Connect with us

cinema

ஓடிடியில் வெளியானது விஜய்யின் கோட்!

Published

on

ஓடிடியில் வெளியானது விஜய்யின் கோட்!

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியானது.

விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கினார்.

உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

படம் வெளியாகி ஒருமாதம் கூட ஆகாத நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.

இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“The GOAT’ படத்தின் Director’s Cut-க்கு VFX, இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடியவில்லை. தயாரிப்பாளருடன் கலந்து பேசி, அந்த காட்சிகளை Deleted Scenes அல்லது Extended Cut ஆக வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். தற்போது இந்த version-ஐ கண்டுகளியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

cinema

தக் லைஃப் படம் வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – கர்நாடக அரசு உறுதி!

Published

on

By

தக் லைஃப் படம் வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் - கர்நாடக அரசு உறுதி!

தக் லைஃப் படம் வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – கர்நாடக அரசு உறுதி!

கர்நாடக அரசு தக் லைஃப் படம் வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி வெளியான தக் லைஃப்.திரைப்படம் திரைப்படம் வெளியானது.

கமல் ஹாசன்,சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று கமல் ஹாசன் கூறியிருந்தார்.

கன்னட அமைப்புகளிடம் கர்நாடக வர்த்தக சபை மன்னிப்பு கேட்க கோரி எதிர்ப்பு கிளம்பியது.

தக் லைஃப் படக்குழு படத்தின் வெளியீட்டை கர்நாடகாவில் ஒத்தி வைத்தது.

வரும் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்.

படத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல” என்று கூறி இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது

ட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும் படத்தை பார்க்க வருவோருக்கும் திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

cinema

“அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை” – உருக்கமாக பேசிய விஜய்!

Published

on

By

அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை” - உருக்கமாக பேசிய விஜய்!

“அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை” – உருக்கமாக பேசிய விஜய்!

3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் அகமதாபாத் விமான விபத்து குறித்து விஜய் பேசினார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி வந்தார்.

மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் கடந்த ஜுன் 4ம் தேதி நடந்து முடிந்தது.

3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருகை தந்த விஜய் அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசினார்.

“அனைவருக்கும் வணக்கம். குஜராத்தில் நேற்று மிகப்பெரிய விமான விபத்து நடைபெற்றது.

சோகமான சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்களை பார்க்கும்போது மனசே பதறுது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்காகவும் இரண்டு நிமிடம் மௌ அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

Continue Reading

cinema

கமல் 4% வாக்குகளை அடமானமாக வைத்து எம்.பி. ஆனவர் – பாண்டியன்

Published

on

By

Kamal became MP by mortgaging 4% of votes - Pandian

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதை பத்திரிகையாளர் பாண்டியன் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் படங்களின் தலைப்புகள் தமிழில் இருக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமலின் அரசியல் மற்றும் வணிக நகர்வுகள்:

கமல்ஹாசன், “கன்னடம் தமிழிலிருந்து வந்தது” என்று கூறியது கர்நாடகாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்ட விளம்பர யுக்தி என்றும், கர்நாடகாவில் பட வெளியீட்டில் ஏற்படும் 30 கோடி ரூபாய் நஷ்டம், உலக சந்தையில் கிடைக்கும் 200 கோடி ரூபாய் லாபத்துடன் ஒப்பிடும்போது பெரியதல்ல என்றும் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவில் இருந்து எம்.பி. பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே கமல் இவ்வாறு பேசியதாகவும், பதவி அறிவிப்பு வராமல் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். கமல் ஒரு உறுதியான கொள்கையாளர் அல்ல என்றும், 4% வாக்குகளை அடமானமாக வைத்து எம்.பி. ஆனவர் என்றும் பாண்டியன் விமர்சித்துள்ளார்.

திராவிட அரசியல் மற்றும் மொழி உணர்வு:

தமிழர்கள் தங்களது மொழி மற்றும் இன உணர்வை இழந்துவிட்டதாகவும், கன்னடர்கள் மற்றும் மராட்டியர்களைப் போல மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் பாண்டியன் ஆதங்கப்பட்டுள்ளார்.

“திராவிடம்” என்ற கொள்கையே தமிழர்களின் மொழி உணர்வை அழித்துவிட்டது என்றும், திராவிடத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கன்னடர்களும் மராட்டியர்களும் உண்மையான தேசியவாதிகள் என்றும், அவர்களைப் பார்த்து தமிழர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Continue Reading

Trending