Connect with us

india

லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!

Published

on

லெபனானின் தென்மேற்கு பகுதிகளிலும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் dஅமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்தது.

தற்போதுவரை பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இஸ்ரேலின் மொத்த கவனமும் ஹமாஸ் பக்கத்திலிருந்து, ஹிஸ்புல்லா பக்கம் திரும்பியுள்ளது.

இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது ஈரான். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் தொடங்கியது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

“தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம் 146-ஆவது பிரிவு ரிசர்வ் படையினர் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் ‘பயங்கரவாத’ நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

india

கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

Published

on

By

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக திருச்செந்தூரில் நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் முருகப்பெருமானின் திருத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

முருகப்பெருமான், அசுரனை வதம் செய்து அறத்தை நிலைநாட்டுவது சூரசம்ஹாரம் ஆகும்

தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல் திருச்செந்தூரில் குவிந்தனர்.

யானை முகத்தைத் தொடர்ந்து சிங்க முகத்துடன் அசுரன் வந்தார்.

கூடி இருந்த பக்தர்கள், ‘அரோகரா… அரோகரா’ என விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கம் எழுப்பினர்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Continue Reading

india

அமெரிக்க அதிபர் தேர்தல் – தொடர் முன்னிலையில் டொனால்ட் ட்ரம்ப்!

Published

on

By

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர் முன்னிலையில் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.

2020-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபரானார்.

அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (நவ.5) நடைபெறவுள்ளது.

ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார்.

குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

270 பேரின் ஆதரவை பெறுபவர்களே ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு.

அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடங்கியது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு!

Published

on

By

தொடங்கியது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு!

அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.

Trending