Connect with us

india

அதிமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்!

Published

on

அதிமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்!

அதிமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்!

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது.

இன்று சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

டங்ஸ்டன் சுரங்க அனுமதியும், புயல், மழை நிவாரண உதவிகள் வழங்காதது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

அழைப்பாணை உள்ளவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகள் குறித்து இன்றைய பொதுக்குழுவில் சில நிர்வாகிகள் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

india

சாதி என்ற தேவையில்லாத சுமையை சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

Published

on

By

சாதி என்ற தேவையில்லாத சுமையை சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

சாதி என்ற தேவையில்லாத சுமையை சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

கோவை மாவட்டம் ஆவல்பட்டி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் மற்றும் சென்ராய பெருமாள் கோயில்களுக்கு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரிய விண்ணப்பத்தை விசாரிக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி “சாதியை நீடித்து நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான இந்த கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யும்படி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சாதி, ஒரு சமூக தீங்கு. சாதியில்லா சமுதாயம் தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது.

சாதி என்பது கற்றுக் கொண்டதில் இருந்தோ, வாழ்வில் செய்த செயல்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, பிறப்பால் வரும் இது சாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்க கூடாது.

அரசியல் சாசனத்தை வகுத்த தலைவர்களின் கனவாக சாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்க கூடாது, சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும்.

அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

அறங்காவலர் பதவிக்கு பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மீக, அற சிந்தனை தான் அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, சாதி அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

india

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி – அன்புமணி ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு!

Published

on

By

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி - அன்புமணி ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி – அன்புமணி ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறையின்றி, சமூகநீதிக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர வேண்டும் என்றால் அதன் அங்கமாக இருக்கும் அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒரு சமுதாயம் பின்தங்கி இருந்தால் கூட ஒட்டுமொத்த மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் அனைவருக்கும் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொரு சமூகமும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பில் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் திட்டம் வகுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

அதேபோல், சமூகநீதியையும், சம நீதியையும் நிலை நிறுத்துவதற்கும், சமூகநீதியை பாதுகாப்பதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு மறுக்கிறது.

அண்டை மாநிலமான தெலுங்கானா சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்தது மட்டுமின்றி, அதனடிப்படையில் அம்மாநிலத்தின் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதுள்ள 50 விழுக்காட்டில் இருந்து 66 விழுக்காடாக உயர்த்த முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்த முன்வரைவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. ஆனால், இதை எதையுமே உணராத தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது.

சமூகநீதியில் அக்கறை கொண்ட மேலும் பல அமைப்புகளின் நிர்வாகிகளும் இத்தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

india

அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட புடுங்க முடியாது! ஆர்.எஸ். பாரதி கருத்து!

Published

on

By

அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட புடுங்க முடியாது! ஆர்.எஸ். பாரதி கருத்து!

அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட புடுங்க முடியாது! ஆர்.எஸ். பாரதி கருத்து!

பாஜக ஆட்சி மலர்ந்தே தீரும் என்று அண்ணாமலை கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, “அது அவரது கற்பனை” என்று பதிலளித்தார்.

சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் திமுக குறித்துப் பேசுகையில், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுத்துவிட்டுத்தான் போவேன்.

அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது.

“அதிமுகவைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்களே பாவம் நெருக்கடியில் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் யாரைப் பற்றியும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.

“ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்பது உங்களுக்கேத் தெரியும். நடிகர் விஜய்க்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பது குறித்த கேள்விக்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

பிரசாந்த் கிஷோர் பற்றி கேட்டதற்கு, பிரசாந்த் கிஷோரே பிகாரில் டெபாசிட் வாங்கவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending