sports
சென்னை மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுக்கிடையே போர் நிலவியது.
‘ஆபரேஷன் சிந்தூர் ‘என்ற பெயரில் இந்திய ராணுவம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டல் ஒரு குறுஞ்செய்தி மூலம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மிரட்டல் செய்தியில், “ஆபரேஷன் சிந்தூருக்காக நாங்கள் ஸ்டேடியத்தில் வெடிகுண்டு வெடிப்போம்… இரத்தக் களரி ஏற்படும்” குறிப்பிடப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்தவுடன், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சேப்பாக்கம் மைதானத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டமான சூழ்நிலை காரணமாக, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
india
கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 44-வது பிறந்தநாள்!
கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 44-வது பிறந்தநாள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட வேளையில், 2018-ஆம் ஆண்டு நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்துப் பேசப்பட்டு வருகிறது.
ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம், “உங்களது முதல் காதலியின் பெயர் என்ன?” என்று மேஜிக் மேன் ஒருவர் புதிரான முறையில் யூகிக்குமாறு கேட்டார். எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் அதிகம் பகிர்ந்துகொள்ளாத தோனி, இந்தப் புதிருக்குப் பதிலளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். முடிவில், “அவள் பெயர் ஸ்வேதா” எனக் கூறி தனது முதல் காதலியின் பெயரை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ளாத தோனி, இவ்வாறு ஒரு விளம்பர நிகழ்வில் வெளிப்படையாகப் பேசியது அப்போது பெரும் கவனத்தைப் பெற்றது. இன்றும், அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ரசிகர்கள் அவரது கிரிக்கெட் சாதனைகளுடன் சேர்த்து, இந்தப் புதிரான தனிப்பட்ட வாழ்க்கை அத்தியாயத்தையும் நினைவுகூர்ந்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்து, நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஒரு புரட்சிகரமான செய்தி! இந்தியக் கடற்படையில் முதல் பெண் போர் விமானி: சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா புதிய வரலாறு படைத்தார்!
இந்தியப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியக் கடற்படையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா, இந்தியக் கடற்படையின் முதல் பெண் போர் விமானி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடற்படை விமானப் பிரிவின் மிகக் கடுமையான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து, அவர் இந்தப் பெருமைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பயிற்சி நிறைவில், சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியாவுக்கு ‘தங்கச் சிறகுகள்’ (Golden Wings) என்ற உயரிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது அவரது அசாத்தியத் துணிச்சலுக்கும், அற்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
முன்னர், இந்தியக் கடற்படை விமானப் பிரிவில் பெண் அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாகவும் (Observers), வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களாகவும் (Air Traffic Controllers) மட்டுமே பணியாற்றி வந்தனர். ஆனால், சப்-லெப்டினன்ட் ஆஸ்தா புனியா போர் விமானியாகப் பொறுப்பேற்றதன் மூலம், போர் விமானங்களைக் கையாளும் மிக முக்கியப் பொறுப்பிலும் பெண்களுக்கு வழி திறந்துள்ளது. இது, பாதுகாப்புப் படைகளில் பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதற்கான கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. ஆஸ்தா புனியாவின் இந்தச் சாதனை, இளம் பெண்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், கனவுகளைத் துரத்தும் துணிச்சலையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.
india
ஃப்ரீஸ்டைல் சதுரங்கத்தில் உலக நம்பர் 1 – மேக்னஸ் கார்ல்சன்
india
‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!
‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!
ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் எம்.எஸ்.தோனி இடம்பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவோரை மதிப்புமிக்க ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் கௌரவிக்கப்படும்.
புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோரும் சேர்கப்பட்டுள்ளனர். அதனுடன், பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
பாகிஸ்தான் வீரர் சனா மிர் பெற்றுள்ளார். பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்திய வீரர்களாக இந்த கெளரவத்தை பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“தோனி 2007 ஐசிசி உலக டி20 வென்ற கேப்டன், 2011இல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன், 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் ஆவார்.
2009ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றவர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வாழ்த்துக்கள். புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இணையும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆவார்”
-
india2 years agoராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி
-
Employment2 years agoதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema2 years ago“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
india8 months agoதிருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழா கோலாகலம்!
-
Uncategorized2 years ago
Hello world!
-
tamilnadu2 years agoStaff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema2 years agoஇந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india1 year agoமெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
